Latest News

September 16, 2014

இலங்கை அதிபருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏற்றுங்கள்- கருணாநிதி கோரிக்கை
by Unknown - 0

ஐக்கிய நாடுகள் சபையின் பொது உறுப்பினர் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே கலந்துகொள்வதைக் கண்டித்து, செப்டம்பர் 25ஆம் தேதியன்று வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டுமென தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற்ற டெசோ கூட்டத்தில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையோ அந்நாட்டின் வேறு எந்தப் பிரதிநிதியையோ, ஐநா பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருந்தபோதும், இந்தக் கோரிக்கையை மத்திய அரசு வலியுறுத்தவில்லை என்றும், ஐ.நாவும் தன் அழைப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஆகவே, “ராஜபக்ஷே ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொள்வதைக் கண்டித்து, உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஈழத் தமிழர் வாழ்வில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் செப்டம்பர் 25ஆம் தேதியன்று தமது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றிவைப்பதோடு, கறுப்புச் சட்டை அணிதல், கறுப்புச் சின்னம் அணிதல் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் கடும் கண்டனத்தை எதிரொலித்திட” வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
« PREV
NEXT »