Latest News

September 27, 2014

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி -நீதிபதி ஜான் மைக்கேல்
by Unknown - 0

பெங்களூரு:  சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தீர்ப்பளித்துள்ளார். இதன் மூலம் ஜெயலலிதா தனது முதலமைச்சர் பதவியை இழக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதால் எம்.எல்.ஏ பதவியை இழக்கிறார். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெயலலிதா குற்ற்வாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். 

பெங்களூரில் போலீஸ் குவிப்பு

ஜெ. வழக்கு தீர்ப்பையொட்டி பெங்களூருவில் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஆயிரம் போலீசை கர்நாடக அரசு குவித்துள்ளது. தமிழநாட்டு வாகனங்கள் சோதனைக்கு பிறகே கர்நாடகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 

அமைச்சர்கள் முகாம்


தமிழக அமைச்சர்கள் அனைவரும் தீர்ப்பை அறிவதற்காக பெங்களூரு வந்து முகாமிட்டுள்ளனர். அதிமுக முக்கிய நிர்வாகிகள் பல ஆயிரம் பேர் பெங்களூருவில் குவிந்துள்ளனர். 

வாகனங்கள் நிறுத்தம்

தமிழநாட்டுக்கு வரும் கர்நாடக மாநில பேருந்துகள் எல்லையோடு நிறுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பின் முடிவை அறிந்த பிறகே பேருந்துகளை இயக்க கர்நாடக போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் இருந்து கர்நாடக செல்லும் பேருந்துகளும் எல்லையோடு நிறுத்தப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த 14 நீதிபதிகள்

1996-ல் தொடரப்பட்ட ஜெ.சொத்துக்குவிப்பு வழக்கை 14 நீதிபதிகள் இதுவரை விசாரித்துள்ளனர். 1996 மே முதல் 2000-மாவது ஆண்டு மார்ச் வரை நீதிபதி சம்பந்தம் வழக்கை விசாரித்தார். 2000-ஏப்ரல் முதல் 2002 ஏப்ரல் வரை நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் விசாரணை நடத்தினார்.  2002 மே முதல் 2002 ஜுலை வரை நிதிபதி அன்பழகன் விசாரித்தார். 2002 ஆகஸ்ட் முதல் 2004 ஜனவரி வரை வழக்கை நீதிபதி ராஜமாணிக்கம் விசாரித்தார். 2004 பிப்ரவரி முதல் 2004 ஏப்ரல் வரை நீதிபதி மதிவாணன் வழக்கை விசாரித்தார்.  


நாடே எதிர்பார்க்கும் தீர்ப்பு


ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பை அறிய இந்தியா முழுவதும் அனைத்து தரப்பினரும்அ ஆர்வம் காட்டி வருகின்றனர். தீர்ப்பு பற்றிய செய்தியை சேகரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் ஆயிரம் செய்தியாளர்கள் முகாமிட்டுள்ளனர். 

பெங்ளூருக்கு மாறிய விவகாரம்


சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க 1997-ல் சிறப்பு நீதிமன்றம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு சுப்ரீம் கோர்ட்டை திமுக அனுகியது. திமுக பொதுச்செயலர் அன்பழகன் மனுவை ஏற்று விசாரணை பெங்களூருக்கு மாற்றம் செய்ய்ப்பட்டது. கடந்த 2003-ம் ஆண்டு முதல் சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூருவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குற்றச்சாட்டு விவரம்

1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மாதம் ரூ.1 சம்பளம் பெற்றார். ரூ.1 மட்டும் சம்பளம் பெற்றவர் ரூ.பல கோடி மதிப்பு சொத்து சேர்த்தார் என குற்றம் சாட்டப்பட்டது. ஜெயா பப்ளிகேஷன் சார்பாக ரூ.20 கோடி வங்கியில் டெபாசிட் செய்தார் என்று புகார் அளிக்கப்பட்டது. நெல்லையில் 1,000 ஏக்கர், சென்னை அருகே 200 ஏக்கர் நிலம் வாங்கியதாகவும் வழக்கு தொடரப்பட்டது. கொடநாட்டில் ஜெயலலிதா பெயரில் தேயிலை தோட்டம், தோட்டம் சென்னை சிறுதாவூரில் பங்களா என குற்றசாட்டு பதிவாகின. 

சுதாகரன் திருமணம்

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 1995-ல் சுதாகரன் வளர்ப்பு மகன் என அறிவித்தார். 1995-ல் சுதாகரனுக்கு சென்னையில் பிரமாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. சுதாகரன் திருமணத்துக்கு ரூ. பலகோடி செலவிடப்பட்டது என்பதும் குற்றச்சாட்டு பதிவாகின. 1996-ல் முதல்வர் பதவியை இழந்ததற்கு சுதாகரன் வளர்ப்பு மகன் இல்லை என் அறிவிக்கப்பட்டது.

செய்தியாளர்களுக்கு அனுமதியில்லை 

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்த செய்தி சேகரிப்பதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹார கோர்ட் வளாகத்தில் நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் குவிந்துள்ளனர். இவர்களில் அடையாள அட்டை பெற்ற செய்தியாளர்கள் மட்டும், கோர்ட் வளாகத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
« PREV
NEXT »

No comments