Latest News

September 01, 2014

யாழ் பல்கலை துணைவேந்தரின் இராணுவ விசுவாசம்
by admin - 0

யாழ். பாதுகாப்புப் படைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒரு மாதகால தமிழ் மொழி கற்கும் பயிற்சி நெறியில் சித்தி பெற்ற 1633 இராணுவத்தினருக்கான சான்றிதழ்கள் காங்கேசன்துறையில் அமைந்துள்ள தல்சேவன விருந்தினர் விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கலந்துகொண்டுள்ளமை தழிம் சமூகத்தையும் கல்வி சமூகத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே பல்கலை மாணவர்களையும் விரிவுரையாளர்களையும் அச்சுறுத்தும் பாணியில் படையினர் செயற்பட்டு வருவது தெரிந்ததே.ஆயினும் இதன் போதெல்லாம் படைத்தரப்பின் நடவடிக்கைக்கு பல்கலை. துணைவேந்தர் ஆதரவாக இருந்து வந்துள்ளார். அவரே மாணவர்கள் மீதான வன்முறைக்கு துணை போகிறார் என பல்கலை. மாணவர் சமூகம் குற்றஞ்சாட்டியிருந்தது.
இதேவேளை அண்மையில் பல்கலையில் நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வெசாக் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இதன் பின்னணியில் இராணுவ புலனாய்வாளர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. பல்கலையில் நடைபெறும் விழாக்களில் பங்குபற்ற பின்னிற்கும் துணைவேந்தர் படையினருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பங்குபற்றியமை கல்விச் சமூகத்திடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளையும் கலந்துகொண்டார்.

« PREV
NEXT »