Latest News

July 18, 2014

புட் டின் விமானத்தின் மீது வைத்த குறியா மலேசிய விமானத்தை தாக்கியது ? திடுக்கிடும் தகவல்கள்
by admin - 0

சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் அதில் இருந்து விலகி தனி நாடானது. ரஷியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிழக்கு உக்ரைனில் உள்ள கிரிமியா பகுதியும் உக்ரைனுடன் இணைந்து இருந்தது. கிரிமியா பகுதியை தனி நாடாக அறிவிக்க கோரி ரஷிய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். சமீபத்தில் உக்ரைனில் உள்ள கிரிமியா பகுதியை தனி நாடாக பிரகடனம் செய்து கொண்டனர். பின்னர் ரஷியாவுடன் கிரிமியா இணைக்கப்பட்டது.
இதே போல் கிழக்கு உக்ரைனும் ரஷியாவுடன் இணைய விரும்பியது. இதை வலியுறுத்தி ரஷிய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வருகிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக அங்கு கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும், கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் 55 பேர் பலியானார்கள். கிளர்ச்சியாளர்களுக்கு ரஷிய ஆதரவு அளிப்பதாக உக்ரைன் அரசாங்கம் குற்றம் சாட்டியது. மேலும் அமெரிக்காவும், உக்ரைனுக்கு ஆதரவாக ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தது.
தங்கள் நாட்டில் பிளவு ஏற்படுத்தும் ரஷியா மீது உக்ரைன் அரசு ஆத்திரம் கொண்டுள்ளது. உக்ரைன் சண்டையில் ஏற்கனவே 2 விமானங்களை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர். இதற்கு பதிலடி கொடுக்கவும் உக்ரைன் திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில்தான் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது ரஷிய அதிபர் புதினுக்கு வைத்த குறியாக இருக்கலாம் என்ற பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பின்பு புதின் நேற்று ரஷியா திரும்பினார். அவரது விமானம் மலேசிய விமானம் வந்த அதே பாதையில் தான் வந்தது. புதின் விமானம் பத்திரமாக மாஸ்கோ போய்ச் சேர்ந்தது.
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு சற்று முன்புதான் புதின் விமானம் சென்றடைந்தது. எனவே, புதினுக்கு வைத்த குறியில் மலேசிய விமானம் சிக்கியதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதும் உக்ரைன் அரசு அவசர அவசரமாக கிளர்ச்சியாளர்கள் தான் இதற்கு காரணம் என்று பழி சுமத்தியது.
ஆனால், கிளர்ச்சியாளர்கள் நாங்கள் சுடவில்லை. உக்ரைன் ராணுவம்தான் சுட்டு வீழ்த்தியதாக மறுத்துள்ளனர். மேலும், மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, புதின் விமானத்துக்கு வைத்த குறியில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
« PREV
NEXT »