Latest News

July 27, 2014

இலங்கையின் உள்ளூர் போர்க்குற்ற விசாரணைகளை நிராகரிப்பதாக ருத்திரகுமாரன் தெரிவிப்பு!
by Unknown - 0

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளுர் மட்ட விசாரணைகளை தாம் நிராகரிப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுர் விசாரணைகளை காட்டிலும் சர்வதேச விசாரணையில் நம்பகத்தன்மை இருப்பதாகவும் ருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர்ந்த தமிழர்களை பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் விசாரணைக்கு, முழுமையான ஆதரவை வழங்குவதாக ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விசாரணை, முன்னாள் யூகோஸ்லேவியா தீர்ப்பாயத்தை போன்ற அமைய வேண்டும் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்பார்ப்பதாகவும் ருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் புலம்பெயர்ந்த தமிழர்கள் சாட்சியங்களை வழங்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அத்துடன் அந்த குழு பொறுப்புக்கூறும் நிலையில் செயற்படவில்லை என்றும் ருத்திரகுமாரன் கூறினார்.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைக்குழு ஒரு பக்கசார்பாக நடந்துக்கொள்ளும் சிலர் எண்ணுகிறார்கள். எனினும் அந்தக்குழு இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக ருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
« PREV
NEXT »