Latest News

January 28, 2014

தென்னைமரவடி தமிழ் கிராமத்தை அநுராதபுரத்துடன் இணைக்க முயற்சி
by admin - 0

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் தனித் தமிழ்க் கிரா­மமும் வடக்கு கிழக்கை இணைக்கும் பிர­தே­ச­மா­கவும் காணப்­படும் தென்னை மர­வடிக் கிரா­மத்தை சிங்­க­ள­ம­ய­மாக்கி அங்­குள்ள மக்­களை வெளி­யேற்றும் தீவிர நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இது உடனே தடுத்து நிறுத்­தப்­பட வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்­பினர் துரை­ராஜா ரவி­கரன் தெரி­வித்­துள்ளார்.
தென்னைமர­வடி மக்­களின் அழைப்­பை­யேற்று அங்கு விஜ­யத்தை மேற்­கொண்டு தென்னை மர­வடி மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை கேட்­ட­றிந்­த பின் அது பற்றி கருத்துத் தெரி­வித்தபோதே ரவி­கரன் இவ்­வாறு கூறினார். அவர் மேலும் குறிப்­பி­டு­கை தென்­னை­ம­ர­வடிக் கிரா­மத்தை அநு­ரா­த­புர மாவட்­டத்­துடன் இணைத்து தமிழ் மக்­களின் பாரம்­ப­ரிய பிர­தே­சத்தை சிங்­க­ள­ம­ய­மாக்கும் ஆரம்ப நட­வ­டிக்­கை­யா­கவே இது கரு­தப்­பட வேண்டும். ஏற்­க­னவே இக்­கி­ராமம் திரு­மலை மாவட்­டத்­தி­லுள்ள குச்­ச­வெளிப் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்கு உட்­பட்­ட­தாக இருந்து வரு­கி­றது. இக்­கி­ரா­மத்தை திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லி­ருந்து பிரித்­தெ­டுத்து அநு­ரா­த­புர மாவட்­டத்­துடன் இணைக்கும் ஒரு சூழ்ச்­சி­யா­கவே இது கரு­தப்­பட வேண்டும்.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அளவில் தென்­னை­ம­ர­வடிக் கிரா­மத்தை சேர்ந்த சுமார் 350 குடும்­பங்­களைச் சேர்ந்­த­வர்கள் அயல் கிரா­மங்­களின் அச்­சு­றுத்தல் கார­ண­மாக இந்­தியா, முல்­லைத்­தீவு, திரு­கோ­ண­மலை ஆகிய இடங்­க­ளுக்கு இடம் பெயர்ந்து சென்­றனர்.
சில குடும்­பங்கள் 2013 ஆம் ஆண்டு மீளக்­கு­டி­யேற்­றப்­பட்ட போதும் பல குடும்­பங்கள் மீளக் குடி­யேற்­றப்­ப­டு­வ­தற்­கு­ரிய வச­திகள் செய்­யப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் சுமார் 200 க்கு மேற்­பட்ட குடும்­பங்கள் குடி­யேற வேண்­டிய நிலை­யி­லுள்­ளன. இந்த சூழ்­நிலையில் தான் தென்­னை­ம­ர­வடிக் கிரா­மங்­களைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான ஏக்கர் வயல் நிலங்­களும் காணி­களும் பேரின சமூ­கத்தால் கப­ளீ­கரம் செய்­யப்­ப­டு­வ­துடன் குடி­யேற்­றமும் செய்­யப்­ப­டு­கி­றது.
அது மாத்­தி­ர­மின்றி பாரம்­ப­ரி­ய­மாக தென்­னை­ம­ர­வடி மக்கள் மீன்­பிடித் தொழிலில் ஈடு­பட்டு வந்த இடங்­களில் பிற மாவட்­டங்­க­ளி­லி­ருந்து வந்து குடி­யேற்­றப்­பட்­ட­வர்கள் தொழில் செய்து வரு­கின்­றனர்.
1984ஆம் ஆண்டு இறு­திப்­ப­கு­தியில் அங்­குள்ள மக்கள் தமது வயல் நிலங்­களில் விவ­சாயம் செய்து அறு­வடை செய்ய குறு­கிய காலம் இருந்த போது ஏற்­பட்ட கல­வ­ரத்தால் இடம்­பெ­யர்ந்த மக்கள் தற்­போது மீளக்­கு­டி­யே­றி­யுள்ள நிலையில் அவர்­களின் பூர்­வீக நிலங்கள் பல பெரும்­பான்மை சமூ­கத்தால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளன.
சிறு­கடல், வயல்­நி­லங்கள், தோட்டக் காணி கள் என அனைத்து வகை வாழ்­வா­தார வழி­களும் முடக்­கப்­பட்டு நுட்­ப­மான முறையில் மக்கள் மேல் இடப்­பெ­யர்வு அவ­சி­ய­நிலை திணிக்­கப்­பட்டு வரு­கின்­றது.
ஊர்­கா­வற்­ப­டை­யி­னரால் அப­க­ரிக்­கப்­பட்ட 22 ஏக்கர் நிலத்தில் பயிர்ச்­செய்கை இடம்­பெ­று­கி­றது. இது பற்றி உயர் அதி­கா­ரிகள் பல­ருக்கு அறி­வித்தும் எது­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்று பிர­தேச மக்கள் கூறு­கி­றார்கள்.
பனிக்­க­வ­யல்­குளம் என்ற சிறி­ய­குளம் சுமார் 45 ஏக்கர் நிலத்­துக்கு விவ­சாயம் செய்ய உத­வி­யது. ஆனால், தற்­போது அக்­கு­ளத்தை மூடி அதை அப­க­ரித்து விவ­சாயம் செய்­கி­றார்கள்.
கொல்­ல­வெளி, பெரு­மாள்­பி­லவு, துவ­ர­மு­ரிப்பு, பனிக்­க­வயல், நல்­ல­தண்ணி ஊத்­துப்­பி­லவு ஆகிய பகு­தி­களில் சுமார் 300 ஏக்கர் நிலம் அப­க­ரிக்­கப்­பட்டு வயல் செய்­கி­றார்கள்.
அப்­ப­கு­தியில் 240 ஏக்கர் வயல் நிலத்தில் 120 ஏக்கர் நிலப்­ப­ரப்­புக்­கான 1975 ஆம் ஆண்டு 60 பேருக்கு வழங்­கப்­பட்ட அனு­ம­திப்­பத்­தி­ரத்தை தமிழ் மக்கள் இன்­னமும் வைத்­தி­ருக்­கி­றார்கள்.அனு­ம­திப்­பத்­திரம் உள்ள காணி­களை இப்­படி அத்­து­மீறி அப­க­ரித்­ துள்ள செயல் சட்­ட­வி­ரோ­த­மாகும்.
அது­மட்­டு­மல்ல, தென்­ன­ம­ர­வ­டிக்கு சொந்­த­மான ஆற்­றுப்­ப­கு­தியில் 2 இடங்களில் பட­கு­ க­ளுக்­கான இறங்­கு­துறை அமைத்து, அதில் தொழில் செய்யும் சிங்­க­புர கிராம பெரும்­பான்மை மக்­க­ளுக்கு தொழில் உப­க­ர­ணங்­களை பாது­காத்து வைப்­ப­தற்­கு­ரிய அறைகள் அமைத்து வச­திகள் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கப்­பட்டு இருக்­கி­றது. இது அத்­து­மீ­றிய செய­லா கும்.
இது தவிர இன்­னோ­ரி­டத்தில், சுமார் 20க்கு மேற்­பட்ட ஓடங்­களை கொண்டு வந்து சட்­ட­வி­ரோ­த­மான முறையில் படுப்பு வலை­களை பயன்­ப­டுத்தி தொழில் செய்­கி­றார்கள்.
தென்­ன­ம­ர­வடிக் கிரா­ம­மூ­டா­கவே பல சிங்­களக் கிரா­மங்­க­ளுக்கு மின் இணைப்­புக்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. எனினும் இக்­கி­ரா­மத்­ திற்கு இன்­னமும் மின்­சாரம் வழங்­கப்­ப­ட­வில்லை. அனைத்து வாழ்­வா­ தார வழி­க­ளை யும் முடக்கி, மக்களை இடம் பெயர வைக்கும் தந்திர நோக்கம் இங்கு செயற்படுத்தப்படு வது நன்றாக தெரிகிறது.
அதை விட உள்ளூர் மாட்டுத்தளமும் பறி போய்விட்டதால் மாடு மேய்க்கக் கூட முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் உள்ள னர்.
தென்னைமரவடிக் கிராமத்து மக்களை அப் பிரதேசத்தைவிட்டு கலைப்பதுடன் அப்பி ரதேசத்தை அநுராதபுர மாவட்டத்துடன் இணை க்கும் இந்த இனவாத நடவடிக்கைகளை கடு மையாக கண்டிப்பதுடன் வட கிழக்கு மக்கள் தென்னைமரவடி கிராமத்தின் மீட்சிக்காக போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments