Latest News

December 08, 2013

ஐ.நா. மனித உரி­மைப்­பே­ரவை மாநாட்டில் இலங்கை எதிர்­கொள்­ள­வி­ருக்கும் சவால்கள் என்ன?
by admin - 0


இலங்கைத் தமி­ழர்கள் தொடர்­பாக இந்­தி­யாவின் கொள்கை என்ன? இதனை இந்­திய அர­சாங்கம் முதலில் வெளி­யிட வேண்டும் என்­கிறார் ஐ. நா. சர்­வ­தேச மன்­னிப்­புச்­ச­பையின் இந்­தியப் பிர­தி­நிதி ஆனந்த பத்­ம­நாதன். போரின்­போது தமி­ழர்­களைப் பாது­காக்க இந்­தியா எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை என்­கிறார் அவர்.
ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 24ஆவது கூட்­டத்­தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இன்னும் மூன்­றரை மாத கால அவ­காசம் உள்­ளது.
இலங்கை அர­சுக்கு மிகப்­பெரும் சோத­னைக்­க­ள­மாக அந்தக் கூட்­டத்­தொடர் அமையப் போவ­தாக பல ஆய்­வா­ளர்கள் தெரி­வித்து வரு­கின்­றனர். “நாங்­களும் தயார் வரட்டும் பார்க்­கலாம்” என இலங்கை அரசு அறிக்­கை­களை வெளி­யிட்­டாலும், அதன் தரப்பு மிகப் பல­வீ­ன­மாக இருப்­ப­தாக இன்­னர்­சிட்­டி­பிரஸ் குறிப்­பிட்­டுள்­ளது.
ஐ.நா. பொதுச் செய­லா­ள­ருடன் இலங்கை ஜனா­தி­பதி செய்து கொண்ட ஒப்­பந்தம் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் என அச் சஞ்­சிகை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றது. ஐ.நா. வின் உள்­ளக ஊட­க­மான இன்­னர்­சிட்டி பிரஸ் போரின் போது இலங்­கையில் இடம்­பெற்ற மனித அவ­லங்கள் தொடர்­பாக ஐ. நா. நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று பல தட­வைகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளதும் இங்கு குறிப்­பி­டக்­கூ­டி­ய­தாகும்.
இம்­முறை மனித உரிமைப் பேர­வையில் இலங்கை அரசு எதிர்­கொள்­ள­வி­ருக்கும் சவால் என்­பது சாதா­ர­ண­மா­ன­தல்ல, அதனை எப்­ப­டியும் சமா­ளித்­து­வி­டலாம் என்ற பேச்­சுக்கே இட­மில்லை.
சர்­வ­தேச ரீதியில் இலங்கை அரசு வழங்­கிய வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்­பது பர­வ­லான குற்­றச்­சாட்டு அந்த வாக்­கு­று­தி­களே அதற்கு எதி­ரான சாட்­சி­க­ளாக மாறி­யுள்­ளன.
இப்­பி­ரச்­சினை தொடர்­பாக ெவாஷிங் டன் போஸ்ட் நாளிதழ் ஏற்­க­னவே சில விப­ரங்­களை வெளி­யிட்­டி­ருந்­தது. அதனை ஒத்­த­தான கருத்­துக்­களை நியூயோர்க் டைம்ஸ் நாளி­தழும் தெரி­வித்­துள்­ளது.
சர்­வ­தே­சத்­திற்கு வாக்­கு­றுதி வழங்­கு­வ­தென்­பது தேர்தல் வாக்­கு­று­தி­களை போன்­ற­தல்ல என அவை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர் இலங்கை அர­சுக்கு எதி­ரான நட­வ­டிக்கை என்­றதும் வாக்­கு­று­தி­களை வழங்கி அதனை நீத்­துப்­போகச் செய்ய முடி­யாது. ஒரு சில காலங்­க­ளுக்கு ஒத்தி வைக்­கலாம். நட­வ­டிக்கை ஒத்தி போடப்­படும் ஒவ்­வொரு சந்­த­ர்ப்­பத்­திலும் தவறை திருத்­திக்­கொள்ள இலங்கை அர­சுக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­டு­கின்­றது என்­பதே பொரு­ளாகும்.
ஆனால் இலங்கை அரசு அதனைப் பயன்­ப­டுத்தத் தவறி விட்­டது. இருப்­பினும் மார்ச் மாதம் வரை ஒரு சந்­தர்ப்பம் இலங்கை அரசின் பக்கம் இருக்­கின்­றது.
அத­னைச்­ச­ரி­வரப் பயன்­ப­டுத்­தினால் பிரச்­சி­னை­க­ளுக்கு இலங்கை அரசு முகம் கொடுக்­க­லாம். வழமை போல் வேறு வழி­களை நாடினால் நிலைமை மோச­ம­டையும் என்­பதே தற்­போ­தைய நிலை என அவை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.
ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் அடுத்த ஆண்டு கூட்டத் தொடரில் இலங்கை, சிரியா ஆகிய நாடு­க­ளுக்கு எதி­ரா­கவும் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றே சர்­வ­தேச ஊட­கங்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. இலங்கை அர­சுக்கு எதி­ரான நிலைமை தொடர்­பாக இங்கு ஆய்வு செய்­யலாம்.
1. ஐ. நா. மனித உரிமைப் பேர­வையில் இலங்கை அர­சுக்கு எதி­ராகக் கொண்டு வரப்­பட்ட இரண்டு தீர்­மா­னங்கள்.
2. இரண்டாம் தீர்­மா­னத்­தின்­படி ஐ. நா. மனித உரிமை ஆணை­யாளர் திரு­மதி நவ­நீ­தம்­பிள்ளை இலங்கை சென்று திரும்­பினார். அவர் நேரில் கண்ட சாட்­சி­களின் அறிக்கை.
3. ஐ. நா. மனித உரிமை அமைப்பின் விஷேடப் பிரதிநிதி கலா­நிதி சலோகா பெயா­னியின் இலங்கை விஜயம் தொட ர்­பான அறிக்கை.
4. பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் ­கமரூன் இலங்கை சென்­றி­ருந்­த­போது வெளி­யான தக­வல்கள் அடங்­கிய அறிக்கை.
5. இரண்டு தீர்­மா­னங்­க­ளையும் கொண்டு வந்த அமெ­ரிக்­காவின் புதிய நிலைப்­பாடு குறித்த அறிக்கை அது மூன்­றா­வ­தாக பேர­வையில் கொண்டு வரப்­ப­ட­வுள்ள தீர்­மா­னத்தின் விபரம்.
6. சர்­வ­தே­சத்­திடம் காலத்­திற்கு காலம் இலங்கை அரசு வழங்­கிய வாக்­கு­று­திகள் அவை நிறை­வேற்­றப்­படாவிட்டால் அதற்­கு­ரிய கார­ணங்கள்.
7. போர்க்­குற்றம் மற்றும் பொறுப்புக் கூறும் கட­மையில் இலங்கை அரசின் நட­வ­டிக்­கைகள் எவை? ஏன் முன்­னேற் றம் காணப்­ப­ட­வில்லை?
8. தமி­ழர்­களின் பிரச்­சி­னைக்கு ஏன் இன் னும் தீர்வு காணப்­ப­ட­வில்லை? வட­மா­காண சபை தேர்தல் நடந்­தாலும் அதன் செயற்­பா­டு­க­ளுக்கு குறுக்­கீடு செய்யும் முட்­டுக்­கட்­டைகள் எவை?
9. போரின் போது பாதிக்­கப்­பட்ட அக­தி­களின் நிலை? மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­ப­டாமல் இருக்கும் அக­தி­களின் நிலை சொந்த வீடு­களும் காணி­களும் இரா­ணு­வத்­தி­னரால் கைப்­பற்­றப்­பட்ட நிலையில் இருக்கும் மக்­களின் வாழ்­வா­தாரம்.
10. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் இரா­ ணு­வத்தின் கட்­டுப்­பாடு குறித்த தக­வல் கள்.
மேற்­கண்ட முக்­கிய பத்து விட­யங்கள் பேரவை மாநாட்டின் போது ஆரா­யப்­ப­ட­வுள்­ள­தாக ஜெனீவா ஐ.நா. பணி­மனை வட்­டா­ரங்­களில் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. இவை இலங்கை அர­சுக்கு எதி­ரான பேர­வையின் நட­வ­டிக்­கைக்கு சாத­க­மான விட­யங்கள்.
அதே­வே­ளையில், இம்­முறை மாநாட் டின் போது புதி­தாக பிரான்ஸ் நாட்டின் பட்­டி­னிக்கு எதி­ரான அமைப்பின் அறிக்கை ஒன்று தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது. அந்த அமைப்பு அது குறித்து முன்­கூட்­டியே சகல சர்­வ­தேச ஊட­கங்­க­ளுக்கும் அறி­வித்­துள்­ளது. ஏ.எஸ்.எப். என அழைக்­கப்­படும். இந்­நி­று­வனம் சர்­வ­தேச தொண்டர் அமைப்­பாகும்.
தமது அமைப்பைச் சேர்ந்த பதி­னொரு பிர­தி­நி­திகள் மூதூரில் வைத்து படு­கொலை செய்­யப்­பட்­டமை குறித்து அந்த அறிக்­கையில் குறிப்­பி­ட­வுள்­ளது. தமி­ழர்கள் என்ற கார­ணத்­தினால் அவர்கள் அனை­வரும் முழந்­தா­ளி­டப்­பட்ட நிலையில் இலங்கைப் படை­யி­னரால் சுட்டுக் கொல்­லப்­பட்­ட­தாக அந்த அமைப்பு தெரி­வித்த விப­ரங்கள் சகல ஊட­கங்க­ளிலும் வெளி­யா­கி­யமை. தெரிந்­ததே.
அந்த அமைப்பின் பிர­தி­நிதி வெளி­நாட்டு செய்தி ஊட­க­மொன்­றுக்கு இது தொடர்­பான விரி­வான தக­வல்­களை வெளி­யிட்­டி­ருந்தார். அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,
இலங்கைப் படை­யி­னரே இந்­தக்­கொ­லை­களைச் செய்­தார்கள் என்­ப­தற்­கான ஆதா­ரங்கள் எம்­மிடம் இருக்­கின்­றன. சாட்­சி­களின் பாது­காப்புக் கருதி அவர்­களின் பெயர்­க­ளையோ அவர்­களின் சாட்­சி­யங்­க­ளையோ இங்கு வெளி­யிட முடி­யாத நிலையில் இருக்­கின்றோம்.
ஆனால் சர்­வ­தேச விசா­ரணை ஒன்று நடை­பெ­று­மானால் அதன்­போது சாட்­சி­யங்­க­ளையும் ஆவ­ணங்­க­ளையும் நாம் வெளி­யிடத் தயா­ரா­கவே இருக்­கின்றோம்.
2006ஆம் ஆண்டு இந்தச் சம்­பவம் மூதூ ரில் இடம்­பெற்­றது. அது முதல் குற்­ற­வா­ளி­களைக் கண்­டு­பி­டிக்க இலங்கை அர­சுடன் இணைந்து செயற்­பட்டோம் ஆனால் இலங்கை அரசு அவர்­களைப் பிடிக்க எது­வித முயற்­சியும் மேற்­கொள்­ள­வில்லை அதனால் நாம் அங்­கி­ருந்து இரண்டு ஆண்­டு­களின் பின் மிக வேத­னை­யுடன் நாடு திரும்­பினோம்.
ஆனால், அந்த கொலைகள் தொடர்­பாக பல ஆதா­ரங்கள் எமக்குக் கிடைத்­துள்­ளன. அவற்றை இலங்கை அர­சிடம் கொடுத்தால் சாட்­சி­க­ளுக்கு ஆபத்து ஏற்­படும் அதனால் தான் மனித உரிமைப் பேர­வை­யிடம் இக் கொலை குறித்து விசா­ரணை செய்ய சர்­வ­தேச விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­பட வேண்டும் எனக் கேட்­க­வுள்ளோம் என்று அவர் குறிப்­பிட்­டுள்ளார்.
எனவே மூதூர் கொலை தொடர்­பாக விசா­ரணை செய்ய சர்­வ­தேச விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­பட வேண்டும் என்ற வேண்­டுகோள் பிரான்­ஸிலி­ருந்தும் வர­வி­ருக்­கின்­றது.
அதே­போன்று திரு­கோ­ண­ம­ லையில் ஐந்து மாணவர் கொலை தொடர்­பா­கவும் சர்­வ­தேச விசா­ரணை கோரப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.
தற்­போது நடை­பெற்­று­வரும் விசா­ர­ணை­களில் நம்­பிக்கை இல்­லா­த­தினால் இந்தக் கோரிக்கை விடப்­பட இருப்­ப­தாக கொல்­லப்­பட்ட மாண­வர்­களின் பெற்­றோர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.
பொறுப்புக் கூறும் கட­மை­யி­லி­ருந்து இலங்கை அரசு தொடர்ந்தும் தவ­று­மே­யானால் சர்­வ­தே­சத்தின் பொறு­மையும் குறைந்து விடும் என அமெ­ரிக்கா எச்­ச­ரித்­துள்­ளது. அமெ­ரிக்­காவின் புதிய துணை ராஜாங்க அமைச்சர் திரு­மதி தேசாய் இத னைக் குறிப்­பிட்­டுள்ளார்.
மார்ச் மாதத்­திற்குள் இலங்கை அரசு தமது நல்­லி­ணக்­கத்தை தெரி­விக்­கா­விடில் சர்­வ­தேச விசா­ரணைக் குழு தவிர்க்க முடி­யா­த­தாகி விடும் என்று அவர் மேலும் குறிப்­பிட்­டுள்ளார். இதே­போன்று பிரித்­தா­ னிய வெளி­நாட்­ட­மைச்­சரும் தெரி­வித்­துள் ளார்.
மார்ச் மாதத்­திற்குள் இலங்கை அரசு தமது பொறுப்புக் கூறும் கட­மையை நிறை­வேற்றும் என நாம் எதிர்­பார்ப்­ப­தா­க வும் அவர் தெரி­வித்­துள்ளார். பிரித்­தா­னியா அமெ­ரிக்கா, பிரான்ஸ், கனடா மனித உரிமை அமைப்­புகள் என ஒட்­டு­மொத்­த­மாக இலங்கை அர­சுக்கு எதி­ராக அழுத்தம் கொடுக்கத் தயா­ரா­கவே உள்­ளன.
ஆனால், இவர்கள் அனை­வரும் புலி­க ளின் ஆத­ர­வா­ளர்கள் என இலங்கை அரசு குறிப்­பி­டு­வதைப் பல ஊட­கங்கள் கண்­டித்­துள்­ளன. வெளி­யி­டப்­பட்ட குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு தகுந்த விசா­ரணை தேவை என அவை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.
ஐ.நா. மனித உரி­மைப்­பே­ர­வையில் இலங்கை அரசை இந்­தியா ஆத­ரிக்­குமா? என்ற கேள்வி பர­வ­லாக பல ஊட­கங்­களில் எழுப்­பப்­பட்­டுள்­ளன. இலங்கை அரசு இந்­தி­யாவின் ஆத­ரவைப் பெற பகீ­ரத முயற்சி மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் அவை குறிப்­பி­டு­கின்­றன.
இலங்கை அரசின் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ இந்­தி­யா­வுக்கு திடீர் விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்தார். ஆனால் எந்தத் தக­வலும் வெளி­வ­ர­வில்லை.
ஜனா­தி­ப­தியின் விஷேட செய்­தி­யுடன் அவர் சென்றார் என முதலில் குறிப்­பி­டப்­பட்­டது பின்பு பொரு­ளா­தார அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ இந்­தி­யா­வுக்குச் சென்று திரும்­பினார்.
ஆனால் அவரின் விஜ­யத்தின் பின்பும் இலங்கை அர­சுக்கு சாத­க­மான தக­வல்கள் வெளி­யா­க­வில்லை. இருப்­பினும் இந்­தியா சில ஆலோ­ச­னை­களை இலங்­கைக்கு வழங்­கி­யி­ருப்­ப­தாக இந்­திய இணை­யத்­த­ள­மொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.
ஆனால் இலங்கை அர­சுக்கு பகி­ரங்­க­மாக உதவி செய்ய இந்­தியா தற்­போ­தைய தேர்தல் சூழ்­நி­லையில் விரும்­ப­வில்லை என்றே குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.
இந்­திய பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. ஆனால் ஜெனீவா ஐ. நா. மனித உரிமைப் பேரவை மாநாடு மார்ச் மாதம் நடை­பெ­று­கின்­றது.
எனவே, இலங்கை அர­சுக்கு எவ்­வ­கை­யி­லா­வது இந்­தியா உதவி செய்தால் அது பொதுத்­தேர்­தலில் காங்­கிரஸ் கட்­சியை பாதிக்­கலாம் என இந்­திய ஊட­கங்கள் பல குறிப்­பிட்­டுள்­ளன. ஆனால் கடந்த முறையைப் போன்று இந்­தியா இர­க­சி­ய­மாக உத­வலாம் என தமிழ் நாட்டு ஊட­கங்கள் பல தெரி­வித்­துள்­ளன.
இந்­தி­யாவின் முக்­கிய அமைச்­ச­ரான ப.சிதம்­பரம் தமிழ் நாட்டில் தெரி­வித்த கருத்­துக்கள் பெரும் கண்­ட­னத்­திற்கு இலக்­கா­கி­யுள்­ளன. அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள பொதுத்­தேர்­தலில் காங்­கிரஸ் கட்சி பாரிய பின்­ன­டைவை தமிழ் நாட்டில் எதிர்­கொள்ளும் என கணிப்­புகள் தெரி­வித்து வரு­கின்­றன.
தமிழ் நாட்டில் காங்­கிரஸ் கட்சி இழந்த செல்­வாக்கை மீண்டும் பெறு­வ­தற்­காக இது போன்ற கருத்­துக்­களை வெளி­யி­டு­வ­தாக மாற்றுக் கட்­சி­யி­னரும் ஏனைய காங்­கிரஸ் கட்­சி­யி­னரும் தெரிவித்து வரு­கின்­றனர். “இலங்கைத் தமி­ழர்­களை இந்­தியா ஒரு­போதும் கைவி­டாது” என அமைச்சர் தெரி­வித்த கருத்து இந்­திய அர­சாங்­கத்தின் கருத்­தல்ல போரை நிறுத்தி தமி­ழர்­களை காப்­பாற்றும் கட­மையை தவற விட்ட இந்­தியா இனிமேல் யாரைக்­காப்­பாற்றப் போகின்­ற­தென பார­திய ஜன­தாக்­கட்சி கேட்­டுள்­ளது.
ஜ.நா சர்­வ­தேச மன்­னிப்­புச்­ச­பையின் இந்­தியப் பிரதிநிதி அனந்த பத்­ம­நாதன் போர்க்­குற்றம் புரிந்த இலங்கை அர­சுக்கு எதி­ராக சர்­வ­தேச விசா­ரணை தேவை­யெ னக் கோரும் அறிக்கை ஒன்றில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­க­ளிடம் கையெ­ழுத்தைப் பெற்­றுள்ளார்.
அதனை அவர் மன்­னிப்புச் சபைக்­கூ­டாக ஜ.நா. மனித உரிமைப் பேர­வை­யிடம் சமர்ப்­பித்­துள்ளார். அவர் இவ்­வாரம் தமிழ்­நாட்டின் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு செவ்­வி­யொன்றை அளித்தார். இலங்கைத் தமி­ழர்கள் தொடர்­பாக இந்­தி­யாவின் கொள்கை என்ன? இதனை இந்­திய அர­சாங்கம் முதலில் வெளி­யிட வேண்டும் என அவர் அதில் குறிப்­பிட்­டி­ருந்தார். போரின் போது இலங்கை அர­சுக்கு ஆத­ர­வா­கவே இந்­தியா செயற்­பட்­டது.
இலங்கை எமது நட்பு நாடு என்­பது இந்­தி­யாவின் கொள்கை விளக்கம் அப்­ப­டி­யானால் இலங்கைத் தமிழர் தொடர்­பாக இந்­தி­யாவின் கொள்கை விளக்கம் என்ன? ஏனெனில் போரின் போது அவர்­களைப் பாது­காக்க இந்­தியா எந்தவித நட­வ­டிக்­கையும் எடுக்க வில்லை என அவர் இந்தச் செவ்­வியின் போது குறிப்­பிட்டார்.
கலா­நிதி சிலேகா பெயான் ஐ. நா. மன்­னிப்புச் சபையின் முக்­கிய பத­வியில் இருப்­பவர் உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந் தோர் தொடர்­பாக ஆராயும் அதி­காரி அவர் இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இலங்கை வந்­தி­ருந்தார்.
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைப் பேர ­வையில் இலங்கை அர­சுக்கு எதி­ரான தீர்­மானம் தொடர்­பா­கவே அவர் அழைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இலங்­கையில் இடம்­பெ­யர்ந்தோர் தொடர்­பாக ஆராய்­வதே அவரின் முக்­கிய கட­மை­யாக இருந்­தது.
அவர் வலி­காமம் வடக்கு மக்கள் தங்­கி­யுள்ள முகா­முக்குச் சென்றார். அங்கு முற்­ப­குதி ஓர­ளவு துப்­ப­ரவு செய்­யப்­பட்டு ஐந்து வீடு­களை அவர் பார்­வை­யிட ஏற்­பாடு செய்­தி­ருந்­தார்கள்.
ஆனால், அனு­ப­வ­மிக்­க­வ­ரான பெயானி ஏனைய வீடு­க­ளையும் பார்­வை­யிட வேண் டும் என்று கூறிய போது முதலில் அதற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டது பின்பு அவ­ரா­கவே எதிரே சென்ற போது தடுக்க முடி­ய ­வில்லை. அதன் பின்பே மக்கள் தமது துன்­பங்­களை அவ­ரிடம் கண்ணீர் விட்­ட­ழு­த­வாறு தெரி­வித்­தனர். இச்­சம்­பவம் படங்­க­ளுடன் புலம் பெயர் தமிழ் ஊட­கங்­க­ளிலும் வெளி­யாகி இருந்­தன.
இரா­ணுவம் தமது காணி­களைக் கைப்­பற்­றி­ய­துடன் அங்­கி­ருந்த வீடு­க­ளையும் கோயில்­க­ளையும் பாட­சா­லை­க­ளையும் அழித்து விட்­டார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். ஐ. நா. அதிகாரி பெயானி முள்ளிவாய்க்கால் சென்ற போதும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொக்குத்தொடுவாய் கொக்கிளாய் பகு திகளில் தமிழருக்குச் சொந்தமான 2556 ஏக்கர் விவசாயக்காணிகள் அபகரிக்கப் பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்பட் டுள்ளார்கள் என்ற விபரம் பெயானிக்கு அறிவிக்கப்பட்டது.
முக்கியமாக ஒருவர் தமது காணி உறு தியை எடுத்துக்காட்டி அங்கு ஒரு புத்த பிக்கு குடியிருப்பதாக அவரின் கவனத் திற்குக் கொண்டு வரப்பட்டது. அந்தக் காணிக்குரிய பெறுமதியை வழங்கப்பட் டால் பெற்றுக்கொள்வீர்களா? என அவரி டம் அரசு அதிகாரி ஒருவர் கேட்டுள்ளார்.
அது எங்கள் பரம்பரைச் சொத்து எனக்கு அந்தக் காணி வேண்டும் என்று குடியிருப்பாளர் பதில் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல குறைபாடுகளை பெயானி குறிப்பெடுத் துள்ளார். பல தடைகளுக்கு மத்தியிலும் ஒருசில தமிழர்களே அவரைச் சந்திக்கக் கூடியதாக இருந்துள்ளது.
« PREV
NEXT »

No comments