Latest News

August 28, 2012

இந்தியாவுக்கு எதிரான செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது-ராமதாஸ்
by admin - 0

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்தவிதமான பயிற்சியும் அளிக்கக்கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் இலங்கை படையினருக்கு இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு கூறியிருக்கிறார். தமிழக மக்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காத அமைச்சரின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இலங்கை அரசு எப்போதுமே இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும்
எதிராகவே செயல்பட்டு வருகிறது. 2009ம் ஆண்டு போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை சிங்களப் படைகள் கொன்று குவித்தன. இலங்கைக் கடற்படையால் இதுவரை 600-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மைக் காலமாக சீனாவுடன் சேர்ந்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ‘இலங்கை எங்களின் நட்பு நாடு. அதற்கு தொடர்ந்து ராணுவ பயிற்சி அளிப்போம்’ என்று பாதுகாப்பு அமைச்சர் கூறுவது, பூகோள அரசியல் சூழல் குறித்து அவருக்கு சரியான புரிதல் இல்லை என்பதையும், தமிழக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் உணர்வுகளை அவரும், மத்திய அரசும் மதிக்கவில்லை என்பதையுமே காட்டுகிறது.
Read More

August 26, 2012

இலங்கை இந்திய இடையே போர் மூன்றாம் உலக போர் இலங்கையால் ஆரம்பமாகும் என்ற கருத்துக்கள் உண்மை?
by admin - 0

இந்திய ஏவுகணைகள்
தொடர்பில்
கண்காணிக்கப்படும் என
இலங்கை அரசாங்கம்
அறிவித்துள்ளதாக பிரபல சிங்கள
பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது இந்தியாவின் அக்கினி ஏவுகணை இலங்கையின்
ஏழு முக்கிய
நிலைகளை இலக்கு வைத்து நிலைநிறுத்தப்பட்
தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க
இணையத்தளமொன்று இந்தத்
தகவலை வெளியிட்டிருந்தது. இந்தத் தகவல் தொடர்பில் கவனம்
செலுத்தப்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கப்
பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். சீனாவுடன் இலங்கை பேணி வரும் உறவுகள்
இந்தியாவை ஆத்திரமடையச் செய்துள்ளதாக
அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக கொள்ளுப்பிட்டியில் சீனாவின்
பிரபல ஆயுத உற்பத்தி நிறுவனங்களில்
ஒன்றான கெடீஸ்
நிறுவனத்திற்கு காணி வழங்கப்பட்டமைக்கு இந்
ஆட்சேபம் வெளியிட்டுள்ளது. வன்னிப் போரின் போது இந்த சீன நிறுவனம்
இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகம்
செய்திருந்தது. ஏவுகணை விவகாரம்
குறித்து அரசாங்கம் விழிப்புடன் செயற்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏவுகணை நிலைநிறுத்தம்
தொடர்பில் வெளியான தகவல்களில்
உண்மையில்லை என இந்திய ஊடகங்கள் தகவல்
வெளியிட்டுள்ளன.
Read More

August 24, 2012

மாணவிகளுக்கு தொலைபேசி இலக்கம் எழுதிக் கொடுக்கும் சிங்கள இராணுவம்; புதுக்குடியிருப்பில் தொடரும் அவலம்
by admin - 0

மாலை நேர வகுப்பிற்குச்
சென்று வரும் மாணவியருக்கு கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக்
கொடுக்கும் சிங்கள இராணுவத்தினரின்
அடாவடி நடவடிக்கைகள் புதுக்குடியிருப்பு பகுதியில் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பிரதேச மாணவர்கள் மாலைநேர வகுப்பிற்கு செல்வதற்காக பேருந்தில் செல்கின்ற போது இவ்வாறு இராணுவத்தினர் கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுக்கின்றனர். இலவசமாக செல்வதற்காக இராணுவ சீருடையில் பேருந்தில் ஏறும் இவர்கள் ஏற்கானவே பெண்களிடம் கொடுப்பதற்காக சிறு சிறு துண்டுகளில் தமது தொலைபேசி இலக்கங்களை எழுதி வைத்திருக்கின்றனர். பேருந்தில் பயணிக்கும் பெண்கள் மற்றும் மாணவியருக்கு அருகில் விரும்பி சென்று நிற்கும் இராணுவத்தினர் அவர்களிடம் வலிய பேச்சைத் தொடங்குவதாகவும் சில வேளைகளில் கை, கால்களினால் சுறண்டுவதாகவும் இறங்கும் போது தாங்கள் ஏற்கனவே எழுதிவைத்திருந்த கைத்தொலைபேசி இலக்கத்தை கொடுத்து விட்டு செல்வதாக
பயணிகள் முறைப்பாடு செய்து வருகின்றனர். இவ்வாறு அடாவடித் தனங்களில் ஈடுபடும் இராணுவத்தினர் தொடர்பாக யாரிடம் சென்று முறையிட முடியும் என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலப்பகுதியில் தாம் எந்தவிதமான பிரச்சனைகளுக் இல்லாமல் வாழ்ந்து வந்ததாகவும் எந்த இரவிலும் பெண்கள் தனியாக நடமாடக் கூடிய சூழ்நிலை நிலவியதாகவும் ஆனால் தற்போது தமது பிள்ளைகள் ஒரு இடத்திற்கு தனியாக செல்ல முடியாத நிலையில் தமது பிள்ளைகள் வாழ்ந்து வருவதாக பெற்றோர்கள் கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளனர். உரிமை போராட்டத்தை திட்டமிட்ட ரீதியில் அழித்த சிங்கள இராணுவம் எமது இனத்தின் கலை,காலாச்சாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இளைய சமூகத்தினரிடம் தமது கலாச்சாரத்தை புகுத்துவதுவதனூடாக எதிர்காலத்தில் தமிழர்களுக்குரிய பாரம்பரியங்கள் இல்லாது அழிக்கப்பட்டு இலங்கை என்பது சிங்களவர்களுக்கே செந்தமானது என்ற
உரிமையினை நிலைநாட்டும் நோக்கத்தை கொண்டே அரசு இவ்வாறான செயற்பாடுகளை தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட ரீதியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் கொடுக்கும் போது தூக்கிஎறியுங்கள் அதுவே தற்பொழுது செய்யக்கூடிய செயல் அதைவிட்டு அவர்களுடன் உரையாட முயட்சிப்பது அவர்களை தூட்டுவதைபோலகும் சில பெண்கள் இப்படியான செயலில் இடுபடுவதை காணக்கூடியதாக உள்ளதாக ஆதங்கப்படுபவர்களின் கூற்று
Read More

மீண்டும் மீண்டும் தவறான கருத்துகளையே கூறுகிறார் கருணாநிதி; பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு
by admin - 0

எனது குற்றச்சாட்டுக்கு பதில்
அறிக்கை விடுவதாக நினைத்துக்
கொண்டு மீண்டும் மீண்டும்
பொய்யானதும்
முன்னுக்குப்பின் முரணானதுமான
விவரங்களையே கருணாநிதி வெளியிட்டுக் கொண்டிருப்பதாக, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் கொண்டு வர
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவரான கருணாநிதி, அதில் அடியோடு தவறினார் என்பது என்னுடைய குற்றச்சாட்டாகும். அதற்குரிய சரியான பதிலை வழங்காமல் மாறாக மீண்டும் மீண்டும் பொய்யானதும் முன்னுக்குப்பின் முரணானதுமான விவரங்களையே கலைஞர் வெளியிட்ட வண்ணம் உள்ளார். என நெடுமாறன் சுட்டிக்காட்டியுள்ளார். ஈழப்போர் நெருக்கடியான கட்டத்தை அடைந்த வேளையில் இவர் செய்த அப்பட்டமான துரோகத்தை மறைப்பதற்காக, முன்பு ஆட்சியில் இருந்த போது நடத்திய செம்மொழி மாநாடும் இப்போது டொசோ மாநாடும் கலைஞர் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ள நெடுமாறன், இந்த இரு மாநாடுகளும் எள்முனை அளவும் உதவவில்லை என்பதை இனியாவது அவர் உணர்வது நல்லது எனக் கூறியுள்ளார்.
Read More

August 15, 2012

யாழ்.தீவகம் சரவணையில் கத்தி முனையில் கொள்ளை!
by admin - 0

தூக்கத்தில் இருந்த
முதியவரை எழுப்பி கத்தி முனையில் அச்சுறுத்திய
திருடர்கள் இங்கிருந்த நகை மற்றும்
பணம்என்பவற்றை திருடிச் சென்ற சம்பவம்
ஒன்று யாழ்.தீவகம் சரவணையில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. குறித்த முதியவர் வீட்டில்
தனித்து வசித்து வந்துள்ளார். அயலவர்களின்
உதவியுடன் வசித்து வந்த
இவரது வீட்டிற்குநள்ளிரவு ஒரு மணியளவில்
வீட்டின் கதவினை உடைத்துக்
கொண்டு உள்ளே வந்த திருடர்கள் உறக்கத்தில் இருந்த
முதியவரை எழுப்பி அவரை கத்தி முனையில்
கொலை செய்யப் போவதாக மிரட்டி அங்கிருந்த
பெரும் தொகையான நகைமற்றும் பணம்
என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.இதன்
போது 50 ஆயிரம் ரூபா பணமும், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும்
மோதிரம்என்பவற்றையும் அபகரித்துச்
சென்றுள்ளனர்.
Read More

August 14, 2012

டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி
by admin - 1

திமுக தலைவர் கருணாநிதியும் சோசியல் மீடியாவுக்குள் நுழைந்துள்ளார். டிவிட்டரில் தனது கணக்கைத் துவக்கவுள்ளார். (https://twitter.com/kalaignar89)

பாஜக தலைவர் அத்வானி இப்போதெல்லாம் தனது பேஸ்புக் அக்கெளண்டில் தான் தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அதே போல குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் டிவிட்டர் பக்கம் மிக மிகப் பிரபலமானதாகும். அங்கு அவருக்கு 8 லட்சம் வாசகர்கள் உள்ளனர்.

இந் நிலையில் டிராமா, சினிமா, டிவி என அந்தந்த கால டெக்னாலஜிக்களை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட இயக்கம் திமுக. ஆனால், இன்டர்நெட்டில் திமுக அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை.

இப்போது தான் திமுக பொருளாளர் ஸ்டாலின் பேஸ்புக்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந் நிலையில் கருணாநிதியும் சமூக வலைத்தள உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். டிவிட்டர் கணக்கு துவங்கியுள்ள கருணாநிதி இனி அதிலும் தனது கருத்துகளை வெளியிடவுள்ளார்.
Read More

தாண்டிக்குளத்தில் தடம்புரண்ட பார ஊர்தி
by admin - 0

வீதிகளில் தற்பொழுது வீபத்துக்கள் அதிகரிக்கின்றன காரணம் சாரதிகளின் நித்திரை தூக்கம் அப்படி சாரதி நித்திரை கொண்டதனால் ஏற்பட்ட தடம் புரண்ட பார ஊர்தி
Read More

August 09, 2012

தனிமையில் வசித்த வயோதிப பெண் அடித்துக் கொலை நகைகளும் கொள்ளை
by admin - 0

யாழ். கோப்பாய் தெற்கில்
தனிமையில் வசித்து வந்த
வயோதிபப் பெண்ணொருவர்
இனந்தெரியாதவர்களால்
அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதோடு அவரது நகை
கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளன. இச்சம்பவம்
இன்று வியாழக்கிழமை அதிகாலை 6
மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில்
கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகக்
கொண்ட
குமராசாமி மங்கையற்கரசி (வயது 70) என்ற
வயோதிப்ப் பெண்ணே அடித்துக்
கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 04ம் திகதி கோப்பாயிலுள்ள
தனது வீட்டை பார்ப்பதற்கு வந்து தங்கியிருந்த
நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவரது நான்கு பிள்ளைகளும் வெளிநாட்டில்
வசித்து வரும் நிலையில் இவர்
கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும்
தனிமையிலேயே வசித்து வந்துள்ளார். இன்று காலை இவரது வீட்டிற்கு கையடக்கத்
தொலைபேசியை சார்ஜ் செய்வதற்கு சென்ற
பெண்ணொருவர் வழங்கிய தகவலின்
அடிப்படையிலேயே கோப்பாய் பொலிஸார்
இவரது சடலத்தை மீட்டுள்ளனர். இவரது சடலம் மீட்கப்பட்ட
இடத்திலிருந்து மிக அண்மையில்
இவரது கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக
சந்தேகிக்கும் மின்சார வயர் ஒன்றையும்
பொலிஸார் மீட்டுள்ளனர். இவர் அணிந்திருந்த காப்பு சங்கிலி உள்ளிட்ட
தங்க ஆபரணங்களும்
இதன்போது கொள்ளையடித்துச்
செல்லப்பட்டுள்ளன. இவரது சடலம் தற்போது பிரேதப்
பரிசோதனைகளுக்காக
யாழ்.போதனா வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கோப்பாயில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

August 08, 2012

யாழில் புதிய வீச்சுடன் உதயமாகியது நம்தேசம் பத்திரிகை! (பட இணைப்பு)
by admin - 0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால்
யாழ்ப்பாணத்தில் நம்தேசம் என்ற மாதம்
இருமுறை வெளிவரும்
பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழீழ தேசியப் பூவான கார்த்திகைப்
பூவை சின்னமாகக் கொண்டு மிடுக்குடன்
இப் பத்திரிகை உதயமாகியுள்ளது. தமிழ்த் தேசியம், தன்னாட்சி உரிமை,
சுயநிர்ணயம் இந்த மூன்றையும்
தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும்
கட்சியாகத் திகழும் தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணி தமிழ் மக்களின் நிலங்கள்
அபகரிப்புக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க மூல
கர்த்தாவாக இருந்தமையும்
குறிப்பிடத்தக்கது. நம்தேசம் பத்திரிகையின் ஆரம்ப நிகழ்வுகளில்
தமிழ் தேசியத்துக்கான மக்கள்
முன்னணி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் அவர்கள்
கலந்துகொண்டு பத்திரிகையின்
பிரதிகளை முக்கியஸ்தர்களுக்கு வழங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்
கட்சியின் பொதுச்செயலாளருமான,
செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தமிழ்
தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் முக்கிய
பிரமுகர்களும் நிகழ்வுகளில்
கலந்துகொண்டு சிறப்பித்தனர். இனி “நம் தேசம்”சிங்களப் பேரினவாதிகளின்
அடக்குமுறைகளை உலகின்
காதுகளுக்கு உரத்துச் சொல்லும்.
Read More

August 06, 2012

பழைய காதலன் சிம்புவுடன் நெருக்கமாகியுள்ளார் நயன்தாரா
by admin - 1

சிம்புவும்
நயன்தாராவும் தங்கள்
நட்பையும் உறவையும்
புதுப்பித்துக்
கொண்டுள்ளனர்
என்பதுதான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட்
செய்தி! சினிமா காதலர்களில் ஏக பரபரப்பைகத்
கிளப்பிய ஜோடி சிம்பு - நயன்தாராதான். வல்லவன் படத்தில்
நடிக்கும்போது இருவருக்கும் பற்றிக்
கொண்டது. அதன்பிறகு இருவரைப் பற்றியும்
செய்தி வராத நாளே இல்லை எனும்
அளவுக்கு இருவரும் சுற்றித் தீர்த்தார்கள். கணவன் - மனைவி போலத்தான்
அனைத்து இடங்களுக்கும் வந்து போனார்கள்.
இந்த நிலையில் திடீரென்று இருவரும்
பிரிந்துவிட்டார்கள். இதற்கான
காரணங்களை இருவருமே சொல்லவில்லை.
ஆனால் நயன்தாரா மட்டும்,
சிம்பு தனக்கு நம்பிக்கை துரோகம்
செய்துவிட்டதாக ஹைதராபாதில் கண்ணீருடன்
பேட்டி கொடுத்தார். அதன்பிறகு தமிழில் ரொம்ப நாள்
வரை நடிக்காமலே இருந்தார்
நயன்தாரா (இப்போது தமன்னா இருக்கிறாரே...
அப்படி!!). பின்னர் மெல்ல அவரை மீண்டும்
தமிழுக்கு வரவைத்தார்கள். ரஜினியெல்லாம்
தலையிட்டு நயனுக்கு ஆறுதல் சொல்லி, தன்
படங்களிலேயே வாய்ப்புக் கொடுத்தார்
(சிவாஜி, குசேலன்). அதைத்
தொடர்ந்து தனது அடுத்த ரவுண்டை கோலிவுட்டில் ஆரம்பித்த
நயன்தாரா, மீண்டும் தனுஷுடன் இணைத்துப்
பேசப்பட்டார். ஆனால் அது சிறிது காலம்தான்.
வில்லு படத்தில் நடித்தபோது அவருக்கும்
படத்தின் இயக்குநர் பிரபுதேவாவுக்கும் காதல்
ஏற்பட்டது. அதன் பிறகு, நயன்தாரா -
பிரபு தேவா காதல் விவகாரம்தான் கடந்த
நான்கு வருடங்களாக மீடியாவின் முதன்மைச் செய்தியாக இருந்தது. நயன்தாரா காதலுக்காக
தன் மனைவியை விவாகரத்து செய்தார்
பிரபு தேவா. இன்னொரு பக்கம், பிரபுதேவாவை திருமணம்
செய்ய, மதம் மாறி, கையில் அவர்
பெயரை பச்சைக் குத்திக்
கொண்டு நயன்தாரா தயாராக இருந்த
நிலையில், இருவரின் காதலும் திடீரென
முறிந்தது. இதற்கும் காரணம், பிரபுதேவாவின்
நம்பிக்கை துரோகம் என்று பேட்டியளித்தார்
நயன்தாரா. இப்போது, மீண்டும் தமிழ்ப் படங்களில்
பிஸியாகிவிட்டார் நயன். கூடவே காதல்
தோல்வியில் அவர் தவித்த சூழலில், மீண்டும்
தன் பழைய காதலன் சிம்புவுடன்
நெருக்கமாகியுள்ளார் (பிரபு தேவாவுடன்
காதல் இருந்தபோதே, நயனும் சிம்புவும் ராசியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது). இந்த நெருக்கத்துக்கு சாட்சியாக இருவரும்
ஒரு பார்ட்டியில் எடுத்துக் கொண்ட
படம்தான் இங்கே நீங்கள் பார்ப்பது.
இது எத்தனை நாளைக்கோ...!
Read More

August 05, 2012

கைதடி விபத்து 3 பேர் படுகாயம் photo in
by admin - 0

முச்சக்கர வண்டியும் வெற்றிலை ஏற்றி வந்த தென்பகுதி வாகனமும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை முந்த வந்த குறிப்பிட்ட வாகனம் முச்சக்கர வண்டியை பின்பக்கத்தால் தாக்கியதால் மூன்று அப்பாவி தமிழர்கள் கடும் காயங்களுக்கு உள்ளனார்கள் இதில் முச்சக்கர வாகன சாரதியின் நிலைமை கவலைகிடமான நிலையில் உள்ளதாக அறியப்படுகிறது. குறிப்பிட்ட விபத்துக்கு காரணமான வாகனம் சாவகச்சேரி போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது
Read More

மன்னார் தமிழ் இளைஞனின் மகத்தான கண்டுபிடிப்பு!
by admin - 0

மன்னாரில் பெரிய மடுவைச்
சேர்ந்த தமிழ் இளைஞன்
ஒருவரால் வீட்டில் உள்ள உபகரணங்களை தொலை தூரத்தில்
இருந்து கட்டுப்படுத்தக் கூடிய
தன்னியங்கி இலத்திரனியல்
சுற்று ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. மென்பொருள் பொறியியலாளரான
தங்கராஜா ஷத்விதன்
என்பவரே இக்கண்டுபிடிப்பை மேற்கொண்டு உ மிகவும் மலிவாகவும், இலகுவாகவும்
கிடைக்கக் கூடிய இலத்திரனியல்
பொருட்களை கொண்டு இது தயாரிக்கப்பட்ட இக்கண்டுபிடிப்பை பயன்படுத்தி நிலக்
கண்ணிவெடிகளை தூரத்தில்
இருந்தவாறே அவதானிக்க கூடிய
தொழிநுட்பத்தை எதிர்காலத்தில் பெற
முடியும்
என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார் ஷத்விதன். இப்படியாக இன்னும் ஏராளமான தமிழ்
இளைஞர்கள்
வெளிச்சத்துக்கு வெளியே வராமல்
உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More

August 02, 2012

யாழ். பல்கலைக்கழக மக்கள் வங்கி கிளையின் ஊழியர் 7 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளுடன் தலைமறைவு
by admin - 0

இலங்கை மக்கள் வங்கியின்
யாழ். பல்கலைக்கழக
கிளையில் கடமையாற்றிய
ஊழியர் ஒருவர் கிளையில்
அடகு வைக்கப்பட்டிருந்த 7 கோடி ரூபா பெறுமதியான தங்க
நகைகளுடன் தலைமறைவாகியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த
இரு தினங்களுக்கு முன்னர்
இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சம்பவம்
தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த கிளையில் கடமையாற்றும் ஊழியர்
ஒருவர் 7 கோடி ரூபா பெறுமதியான
நகைகளை எடுத்துக்
கொண்டு தலைமறைவாகியுள்ளார். இந்த
நகைகள் அனைத்தும் வங்கியில்
அடகு வைக்கப்பட்டிருந்தவை என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த விடயத்தை வங்கி நிர்வாகம்
ஊடகங்களுக்கு கசியவிடாது பார்த்துக்
கொண்டது. எனினும் விடயம்
ஊடங்களுக்கு இன்று மாலை தெரியவந்துள்ளது இதனையடுத்து, யாழ். குடாநாட்டில்
இயங்கும், சில ஊடகங்களின் முதலாளிகளுடன்
தொடர்பு கொண்ட வங்கி நிர்வாகம் குறித்த
செய்தி வெளியிடப்பட்டால் மக்கள்
வங்கி மீது கொண்டுள்ள
நம்பிக்கை அற்றுப்போகும். எனவே அவ்வாறு ஏதேனும் நடந்தால், எங்கள்
விளம்பரங்கள் உங்களுக்கு கிடையாது என
கூறியுள்ளது. அதனையடுத்து, செய்தியை தணிக்கை செய்ய
அந்த ஊடக நிர்வாகங்கள், ஆசிரிய
பீடத்திற்கு உத்தரவிட்டிருப்பதாக
தெரியவருகின்றது. இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில்
இறுதி யுத்தத்தின்போது பெருமளவு மக்கள்
தாங்கள் அடகு வைத்த நகைகளின் அத்தாட்சித்
துண்டுகளை கைவிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில், யுத்தத்தின் பின்னர் தங்கள்
அடையாள
அட்டைகளை காண்பித்து அவற்றை மீட்க
முயற்சித்தபோதும், அந்த
மக்களுக்கு அவை கிடைக்கவில்லை.
குறிப்பாக புதுக்குடியிருப்பில் 5 பவுண் நகையை 23 ஆயிரத்திற்கு 2008ம்
ஆண்டு பெண்னொருவர் அடகு வைத்துள்ளார். ஆனால் அதற்கான அத்தாட்சித்
துண்டை யுத்தகாலத்தில் தொலைத்துவிட்டு,
யுத்தத்தின் பின்னர் அந்த
நகையினை மீட்பதற்கு குறித்த மக்கள்
வங்கியின் கொழும்பு தலைமையகம் வரையில்
ஏறியிறங்கியிருக்கின்றார். ஆனால் இன்றுவரை அந்த
நகை அவருக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு பல சம்பவங்கள் இந்த வங்கியினால்
இடம்பெற்றுள்ளது. ஆனால் ஏனைய வங்கிகள்
மனிதாபிமான அடிப்படையில்
மக்களுக்கு அவர்களுடைய
நகைகளை வழங்கியிருக்கின்றது.
Read More