Latest News

April 30, 2012

நவீன டைட்டானிக் கப்பலை உருவாக்க ஆஸ்திரேலிய கோடீசுவரர் திட்டம்
by admin - 0

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் வடிவமைப்புடன் நவீன வசதிகள் அடங்கிய புதிய கப்பல் ஒன்றை உருவாக்க ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான கிளைவ் பாமர் முயற்சிகள் எடுத்துள்ளார்.
இவ்வகையான கப்பலை உருவாக்குமாறு சீன அரசுக்கு சொந்தமான கப்பல் தயாரிப்பு நிறுவனத்திடம் தான் கோரியிருப்பதாக ஊடகங்களிடம் கிளைவ் பாமர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலை உருவாக்கும் பணி அடுத்த ஆண்டு இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கும் என்றும் 2016ஆம் ஆண்டு இக்கப்பல் உருவாக்கப்பட்டு கடல் பயணங்களுக்குத் தயாராகிவிடும் என்றும் அவர் கூறினார்.
வடிவமைப்பு, அளவுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் இது கூடிய அளவுக்கு சென்ற நூற்றாண்டின் டைட்டானிக் கப்பலை ஒத்ததாகவே உருவாக்கப்படும் ஆனால் நவீன தொழில்நுட்பங்கள் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதே தனது திட்டம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சி.எஸ்.சி. ஜின்லிங் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இக்கப்பலை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் தான் கையொப்பமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி மூழ்கிய ஒரு கப்பல். இக்கப்பல் மூழ்கியதன் நூற்றாண்டு நிறைவுதினம்கூட அண்மையில் 15 ஏப்ரல் அன்று வந்திருந்தது.

Read More

கோர முகத்தால் தவிக்கும் மனிதன்
by admin - 0

Mohammad Hussainஎன்பது இவருடைய பெயர் குடும்பமாக மிகவும் அமைதியாக வழ்ந்து வருகிறார் இவருக்கு 44 வயது ஆகிறது, haemangiomaஎன்னும் இரத்த நாளங்களுக்குள் வளரும் கட்டியினால் இவர் இந்த தோற்றத்தை பெற்றுள்ளார் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.இவரின் இந்த தோற்றத்தை பர்த்து விதியில் செல்பவர்கள் பயந்து விழத்தி செல்வதாக ஆதங்கப்பட்டுகிறார் இதனால் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார். மனிதவாழ்க்கையில் எத்தனை வியாதிகளோ?








Read More

தலைவர் பிரபாகரன் போராளி அவர் உயிருடன் வாழ்கிறார் கருணாநிதி
by admin - 0

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா என்று திமுக
தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது போராளிகளுக்கு எப்போதும்
சாவு இல்லை என்று அவர் பதிலளித்தார். மேலும் புலிகள் மீண்டும் போராட்டம் நடத்தினால்டெசோ அமைப்பு அதை ஆதரிக்குமா என்று கேட்டதற்கு, புலிகள் மீண்டும் வந்து போராட்டம் நடத்தினால் அறப்போராட்டம் நடத்துங்கள் என்றுதான் அழைப்பு விடுப்போம் என்று அவர் கூறினார். போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உள்ளம் தூய்மையாக இருந்தால்
அந்த போர்க்குணம் என்றைக்கும் மாறாமல் இருக்குமானால் எந்த லட்சியத்துக்காக குறிக்கோளுக்காக போராடுகிறார்களோ அவர்கள் அதிலே மாறாமல் இருப்பார்களேயானால் அந்த போராளிகளிடத்தில் எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு என்று கருணாநிதி மேலும் தெரிவித்தார்.
Read More

மரக்கறிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அரசு முடிவு
by admin - 0


நாட்டில் தற்போது மித மிஞ்சிய அரிசி மற்றும் மரக்கறிகள் உற்பத்தி செய்யப் படுகின்றன. இதனால் அவற்றைச் சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் நஷ்ட மடைந்து வருகிறார்கள்.

எனவே அவர்களுக்கு கூடுதல் வருமானத்தைப் பெற்று கொடுக்கும் வகையில் அரிசி, மரக்கறி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கான நட வடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பொருளாதார அருவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

அரசின் விவசாய அபிவிருத்தித் திட்டங்களின் விளைவாலேயே அதிகளவான விளைச்சலை விவசாயிகள் பெற்றுள்ளனர். எனினும் விளைச்சலுக்குரிய பயனை அவர்கள் பெறமுடியாதுள்ளனர். உள்ளூர்ச் சந்தைகளை விடவும் ஏற்றுமதி மூலம் விவசாயிகள் பயன்பெற முடியும்.

மேலதிகமாகவுள்ள உணவுப் பொருள்களை பதப்படுத்தும் திட்டம் மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவுள்ளது. பொதுமக்களால் வீட்டுத் தோட்டங்களில் மேற் கொள்ளப்படும் பயிர்ச்செய்கை காரணமாகவே அளவுக்கதிகமான உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றார்.

Read More

பிரபாகரன் பிறந்த ஊருக்கு உதவிய நடிகை ஏஞ்சலினா ஜோலி
by admin - 0


ஐ.நா அகதிகள் மறுவாழ்வு நிறுவனத்தின் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரபல கொலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவர் கடந்த பத்து ஆண்டுகளாக உலகின் பல பாகங்களுக்கும் சென்று அகதிகளுக்கு உதவியதற்காக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. தனது உலகப் பயணங்களின் போது மறந்துவிடாமல் பிரபாகரன் பிறந்த ஊருக்கும் போய் நேரடியாக உதவியுள்ளார். சுனாமி வந்தபோது இலங்கை சென்றதும் அவர் முதலில் மரியாதை கொடுத்தது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊருக்குத்தான். போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வல்வெட்டித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலை சென்று ஒரு மில்லியன் ரூபாவை வழங்கினார். இன்று வடமாகாணத்தின் சிறந்த ஆரோக்கியமான வைத்தியசாலைகளில் முதன்மையாக இருப்பது வல்வை வைத்தியசாலையே. அந்த வைத்தியசாலையின் வாசலில் நடிகை ஏஞ்சலினா ஜோலி எடுத்துக் கொண்ட புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இப்போது ஐ.நா அகதிகளுக்கான சிறப்புத் தூதுவர் பதவியை ஏஞ்சலினா ஜோலிக்கு வழங்கியிருப்பது ஈழத் தமிழ் மக்களுக்கும் மகிழ்வான விடயமே. பிரபாகரன் பிறந்த வீட்டை இடிக்கும் சிங்கள இனவாத அரசு மக்கள் மனங்களில் அவர் பிடித்துள்ள இடத்தை இடிக்க முடியாமல் தவிப்பதற்கு ஏஞ்சலினா ஜோலியும் ஓர் உதாரணமாகும்.



Read More

நெற்பயிரில் வேதியியல் சாரா பூச்சிக்கட்டுப்பாடு முறைகள்
by admin - 0



விளக்குப்பொறி: பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்திழுக்கவும் விளக்குப் பொறிகளைப் பயன்புடுத்தலாம். தேவையில்லாத பொருட்களை வயலில் ஒரு ஓரமாகக் குவித்து மாலை வேளைகளில் தீ மூட்டி விளக்குப் பொறியாகப் பயன்படுத்தலாம். மேலும் அரிக்கேன் விளக்கு மற்றும் மின்சார விளக்குகளையும் பொறியாகப் பயன்படுத்தலாம். இந்தப் பொறிகளை மாலை ஐந்தரை மணிக்கு மேல் வயலில் வைக்க வேண்டும். தாய் அந்துப் பூச்சிகள் விளக்கின் வெளிச்சத்தினால் கவரப்படும். இந்த முறையில் தாய்ப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். விளக்குப் பொறிகளின் அருகில் ஒரு பெரிய தட்டு அல்லது பாத்திரத்தில் கொஞ்சம் மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் வைக்க வேண்டும்.
* மஞ்சள் ஒட்டுப்பொறி: மஞ்சள் இரும்புத்தகடு அல்லது மஞ்சள் டப்பாக்களில் ஆமணக்கு எண்ணெயை தடவி வயலில் வைக்க வேண்டும். இந்த நிறத்தினால் கவரப்படும் வெள்ளை ஈக்கள் மற்றும் தத்துப்பூச்சிகள் அந்தப் பொறிகளில் ஒட்டிக் கொள்ளும். ஒவ்வொரு நாளும் ஒட்டிக்கொள்ளும் பூச்சிகளை துடைத்து எடுத்துவிட்டு மீண்டும் எண்ணெய் தடவவேண்டும்.
* பறவை தாங்கி (பறவை ஆசனம்): நீளமான காய்ந்த குச்சிகளைக் கொண்டு "டி' வடிவ பறவை தாங்கிகளை (ஒரு ஏக்கருக்கு 15-20) வயலில் வைக்க வேண்டும். இவற்றில் பறவைகள், ஆந்தைகள் வந்து உட்கார வசதியாக இருக்கும். இவற்றில் உட்காரும் பறவைகள் வயலில் காணப்படும் புழுக்கள் மற்றும் எலிகளை உண்டு அவற்றைக் கட்டுப்படுத்தும்.
* கையால் சேகரித்து அழித்தல்: சாகுபடி பரப்பரளவு குறைவாக இருக்கும்பொழுது இந்த முறையைப் பயன்படுத்தலாம். பாலிதீன் பைகளில் தண்ணீருடன் சிறிதளவு மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும். மாலை நேரங்களில் வயல்களில் காணப்படும் புழுக்கள் மற்றும் முட்டைக்குவியல்களைச் சேகரித்து மண்ணெண்ணெய் சேர்க்கப்பட்ட இந்தப் பைகளில் போட்டு அழிக்கலாம். பூச்சித் தாக்குதல் குறைவாக இருக்கும்பொழுதே இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும்
Read More

April 29, 2012

நொருங்கியது பொலிஸ் அதிரடி; முக்கிய சூத்திரதாரி பேபியன் உட்பட ஐவர் கைது
by admin - 0

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விநியோகிக்கும் பெரும் வலையமைப்பு ஒன்றை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நிர்மூலம் ஆக்கியுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தின் பிரதான சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படும் பேபியன் என்கிற எஸ்.கரிகரன் (வயது 26) உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து சிறிய 50 பைக்கற் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகேரா தெரிவித்தார்.

கடந்த இரு நாள்களாக பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் ஐந்துசந்திப் பகுதியில் வைத்து நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து மேலும் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்துக்கான போதைப்பொருள் வர்த்தகத்தின் மைய நீரோட்டமாக விளங்குகிறார் என நீண்டகாலமாகவே தெரிவிக்கப்பட்டு வந்தது. எனினும் தகுந்த ஆதாரங்கள் இல்லாததன் காரணமாக அவர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்காமல் ஒதுங்கியிருந்தனர்.இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய விசேட அதிரடிப்படையினர் பொலிஸாரின் உதவியுடன் பேபியனை ஆனைக்கோட்டை பொன்னையா ஒழுங்கையில் வைத்து கைது செய்தனர். மற்றைய இருவரும் ஐந்து சந்திப் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இரட்ணசிங்கம் வசீகரன் (வயது 24), பாலராஜா சிறிகாந் (வயது 23), இரட்ணசபாபதி பிரியந்தன் (வயது 24), சேகரன் சிறிகரன் (வயது 24) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

மே 1-ல் கமலின் விஸ்வரூபம் ட்ரைலர் ரிலீஸ்
by admin - 0

சாதனை நடிகர் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் முன்னோட்டக் காட்சி வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் பொருட்செலவில் கமல்ஹாஸன் நடித்து இயக்கி வரும் படம் விஸ்வரூபம்.

இந்தப் படம் குறித்த எந்த தகவலும் வெளியாகாத அளவு ரகசியம் காத்து வருகிறார் கமல் ஹாஸன். எந்தத் தகவலையும் வெளியில் சொல்லக்கூடாது என படத்தில் பணியாற்றும் அனைத்து டெக்னீஷியன்களுக்கும் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அட, படத்தின் பிஆர்ஓவே விஸ்வரூபம் என்றதும் உதடுகளை இறுக்க மூடிக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

அன்று உழைப்பாளர் தினம் என்பதால், அன்றே தனது படத்தின் டிரைலரை கமல் வெளியிடப் போகிறாராம்.

விஸ்வரூபம் படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்தது. இப்போது படக் குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்த படத்தில் கமலின் கெட்டப் எப்படி இருக்கும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. கமல் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளதாக சொல்கிறார்கள்.

முதல் தடவையாக மே 1-ந்தேதி டிரைலர் மூலம் அவரது தோற்றம் தெரிய வர உள்ளது. தியேட்டர்களிலும் இணைய தளங்களிலும் அன்றைய தினம் விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரை வெளியிடுகின்றனர்.

30 நொடிகள் ஓடும் வகையில் இந்த டிரைலரை தயார் செய்துள்ளனர். படத்தின் முக்கிய சீன்கள் இந்த டிரைலரில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

Read More

April 28, 2012

பிரபுதேவாவும் சோனாக்ஷியும்--மும்பை திரையுலகில் இவர்களின் நெருக்கம் பற்றி கிசுகிசு பரவியுள்ளது.
by admin - 0



பிரபு தேவாவின் காதல் கதைகள் கிட்டத்தட்ட சிந்துபாத் கதை மாதிரி 'முற்றும்' விழாமல் தொடர்ந்து கொண்டே உள்ளன.

நயன்தாராவும் அவரும் பிரிந்த பிறகு, இந்த நடிகையுடன் காதல், அந்த நடிகையுடன் நெருக்கம் என செய்திகள் வருகின்றன.

ஹன்ஸிகாவைத்தான் பிரபு தேவா காதலிப்பதாக கிசுகிசு பரவியது. அதனை மறுத்த ஹன்ஸிகா, கரகாட்டாக்காரன் கோவை சரளா பாணியில், பிரபு தேவா என் அண்ணன் மாதிரி என்று ஒரு போடு போட்டார்.

அடுத்து சமீபத்தில் பிரபு தேவாவுடன் நள்ளிரவுப் பார்ட்டியில் பங்கேற்று நெருக்கமாக நடனம் ஆடி பத்திரிகைப் பக்கங்களைச் சூடேற்றியிருந்தார் த்ரிஷா.

அந்த சூடு குறையும் முன் இப்போது பிரபு தேவாவுடன் கிசுகிசுக்கப்படுபவர் மும்பை அழகுப் புயல் சோனாக்ஷி சின்ஹா. பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா மகள் இவர்.

பிரபு தேவா இயக்கியுள்ள ரவுடி ரதோர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

பிரபுதேவாவும், நயன்தாராவும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்துள்ளனர். நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒப்பந்தமாகி ஐதராபாத்துக்கும் கோடம்பாக்கத்துக்குமாய் போய் வந்து கொண்டு இருக்கிறார்.

பெங்களூர் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியை காண பிரபுதேவாவும் சோனாக்ஷியும் ஜோடியாக வந்தனர்.

இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோரது கண்களும் அவர்களையே மொய்த்தன. எதிர்பாராதவிதமாக மழை பெய்து போட்டியை நடக்க விடாமல் செய்தது. இதனால் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். மும்பை திரையுலகில் இவர்களின் நெருக்கம் பற்றி கிசுகிசு பரவியுள்ளது.

மும்பை நட்சத்திர ஓட்டல்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சிகளிலும் பிரபுதேவா - சோனாக்ஷி ஜோடியாகப் பங்கேற்று, மீடியாவுக்கு ஏக சென்சேஷனல் செய்திகளைத் தந்து வருகிறார்கள்.

இது எங்கே போய் முடியப் போகிறதோ...



Read More

விஜய் ஏற்படுத்திய நஷ்டம்! கை கொடுப்பாரா அஜித்!
by admin - 0



அஜித் நடித்துள்ள பில்லா 2 படத்தின் இசை அஜித்தின் பிறந்தநாளான மே-1ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் படம் எப்போது ரிலீஸ் எப்போது என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பில்லா 2 படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை 28 கோடி ரூபாய் கொடுத்து ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். கடைசியாக ரவிச்சந்திரன் விஜய் நடித்த வேலாயுதம் படத்தை தயாரித்து நஷ்டம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து இப்போது இவ்வளவு பெரிய தொகை கொடுத்து பில்லா 2 படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருப்பதால், விஜய்யின் ‘காவலன்’ விநியோக உரிமையை வாங்கியது... விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ படம் எடுத்தது... என நஷ்டம் மேல் நஷ்பட்டிருக்கும் ரவியின் தலையை ‘தல’ காப்பாத்துமா?
Read More

பாணின் விலை மூன்று ரூபாவினால் அதிகரிப்பு
by admin - 0



450 கிராம் பாண் ஒன்றின் விலை மூன்று ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து இது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மீண்டும் நெருக்கடியில் பிரிட்டிஷ் பொருளாதாரம்
by admin - 0

பிரிட்டிஷ் பொருளாதாரம் பொருளாதார நிபுணர்களின் எதிர்வுகூறல்களுக்கு மாறாக மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பிரிட்டனின் பொருளாதாரம் 0.2 வீத வீழ்ச்சியைக் காட்டுகிறது.
இதே போன்று இதற்கு முந்தைய காலாண்டிலும் பிரிட்டிஷ் பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டது
டபுள் டிப் ரிஸஷன் எனப்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்த மாத்திரத்திலேயே இன்னொரு சடுதியான வீழ்ச்சிக்குள் செல்லும் இரண்டாவது தடவை நெருக்கடியை 1970களுக்குப் பின்னர் பிரிட்டன் முதற்தடவையாக சந்திக்கிறது.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை காட்டும் புள்ளிவிபரங்கள் மிக மிக ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ளார்.
இப்பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமரும் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பர்ணுமே பொறுப்பு என்று எதிர்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் குற்றஞ்சாட்டியுள்ளார். அழிவை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார கொள்கைகளே இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார்.
3 வீதத்தால் வீழ்ச்சியைக் காட்டியுள்ள கட்டுமானத்துறையின் பலவீனமே இதற்கு காரணம் என்று பிபிசியின் பொருளாதாரச் செய்தியாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கடந்த திங்களன்று, தானும் பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்துவிட்டதாக ஸ்பெயின் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Read More

யாழ் பொம்மை வெளியில் மனைவிக்கு தீ வைக்க முயன்ற கணவன்
by admin - 0

யாழ்ப்பாணம் நாவாந்துறை, பொம்மை வெளிப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தனது மனைவியைப் பூட்டிவைத்து மண்ணெண்ணை ஊற்றி கொழுத்த முயற்சி செய்தார் என்ற சந்தேகத்தில் குறித்த பெண்ணின் கணவனை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்மணி (வயது 40) கணவனிடமிருந்து தப்பியோடி யாழ்.பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பாக முறையிட்டுள்ளார்.

அவரிடமிருந்து முறைப்பாட்டைப் பதிவு செய்து கொண்டு அப் பெண்ணின் கணவனைத் தோடி யாழ்.பொலிஸார் இரண்டு வாகனத்தில் விரைந்துள்ளதாகவும் அவர் யாழ்.நகரிலுள்ள மதுக்கடை ஒன்றில் மது அருந்திக் கொண்டிருக்கும் போது விலங்கிடப்பட்ட நிலையில் தூக்கி வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற் கொண்டு வருவதாக யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Read More

April 27, 2012

மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா!!!
by admin - 0

தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது.



மதுரைக்கு சமீபத்தில் நித்தியானந்தா வந்தார். அங்கு மதுரை ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரிடம் 6 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், நித்தியானந்தாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.

நித்தியானந்தாவின் மதுரை ஆதீன மட வருகை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் மதுரை ஆதீனகர்த்தராக அவருக்கு முடி சூட்டப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் அருகே உள்ள பிடாதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீட தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து முடிசூட்டல் நிகழ்ச்சி நடந்துள்ளது. மதுரை ஆதீனமாக தற்போது உள்ள அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், நித்தியானந்தாவுக்கு கிரீடம் சூட்டி தனது அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்தார்.

பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகாசன்னிதானமாக நித்தியானந்தாவை நாங்கள் இன்று அறிவித்து பிரகடனம் செய்கிறோம். அவர்தான் மதுரை ஆதீனத்தின் சட்டப்பூர்வமான அடுத்த மகா குரு சன்னிதானம். அவர் இனி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுவார்.

மதுரை ஆதீன மடத்தின் வழிபாடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை அவர் இனி முழுமையாக செயல்படுத்துவார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான 1250 ஏக்கர் நிலம், கோவில்கள் மற்றும் அனைத்து அசையும், அசைய சொத்துக்களையும் இனிமேல் நித்தியானந்தரே நிர்வகிப்பார் என்றார் அவர்.

இந்தியாவின் மிகப் பழமையான ஆதீன மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். இது எப்போது தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தம் இந்த ஆதீனத்தை உயிர்ப்பித்து புதுப்பித்தார். முத்தமிழுக்குச் சங்கம் வைத்த மதுரையில் இந்த ஆதீனத்தை திருஞான சம்பந்தர் நிறுவினார்.

இப்படிப்பட்ட ஆதீனத்தின் அடுத்த தலைவராக நித்தியானந்தரைத் தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

April 26, 2012

அஜீத்தின் அசத்தல் ஹெலிகாப்டர் சண்டை - குவிந்த பாராட்டு! (காணொளி)
by admin - 0

பில்லா 2 படத்தின் டிரைலருக்கு பெரும் வரவேற்பு இணையத்தில். பல லட்சம் பேர் பார்த்த வீடியோவாக மாறியுள்ளது இந்த ட்ரைலர்.

வெளியான சில மணி நேரங்களில் 4 லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள்.

இந்த வீடியோவில் ரசிகர்களை உறைய வைத்தது அஜீத்தின் மயிர்க்கூச்செரியும் சண்டைக் காட்சிகள்.

மிக உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில், கயிறு கூட கட்டிக் கொள்ளாமல் திறந்த கதவருகே நின்றபடி அஜீத் போடும் சண்டைக் காட்சி அது.

நானும் எத்தனையோ படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்துள்ளேன். ஆனால் இந்த அளவு ரிஸ்க் எடுத்த முன்னணி நடிகரை பார்த்ததில்லை. மைனஸ் டிகிரி குளிரில், உயரப் பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்த அஜீத், ஒரு கையால் ஹெலிகாப்டரின் கம்பியைப் பிடித்து தொங்கியபடி சண்டை போட்டது என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சினிமா வரலாற்றிலேயே எந்த நடிகரும் எடுக்காத ரிஸ்க் இது என அவருக்கு ஸ்டன்ட் அமைத்துக் கொடுத்த இயக்குநர் கீசா காம்பக்தீ வியப்பு தெரிவித்துள்ளார்.

ஏகத்துக்கும் ஏத்தி விடறாங்களே...!



Read More

அஜீத் பட நாயகிக்கு கல்யாணம்!
by admin - 0



அஜீத்துடன் இணைந்து பில்லா-2 படத்தில் நடித்து வரும் பிரேசில் நாட்டு பேரழகி புரூனா அப்துல்லாவுக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டதாம். இதனால் விரைவிலேயே அவர் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்பம் நடத்தப் போகிறாராம்.

பில்லா 2 படம்தான் அவருடைய கடைசிப் படமாம். புரூனாவை மணக்கப் போகும் நபர் ஒரு பெங்காலியாம். கடந்த 3 வருடங்களாக அவர்கள் மும்முரமாக காதலித்து வருகின்றனராம். சமீபத்தில் புரூனாவுடன் பிரேசில் போய் அவருடைய அம்மா, அப்பாவைப் பார்த்து விட்டு வந்தாராம் இந்தக் காதலர்.

புரூனா வீட்டில் அத்தனை பேருக்கும் அவரது காதலரைப் பிடித்து விட்டதாம். இதனால் நிச்சயம் செய்து விட்டனர். இருப்பினும் பில்லா படத்தை முடித்து விட்டு வந்து விடுகிறேன், அதற்குப் பிறகு கல்யாணம், கச்சேரியை வைத்துக் கொள்ளலாம் என்று புரூனா கூறியுள்ளதால் படம் முடிந்த பிறகுதான் கல்யாணமாம்.

வெரிகுட்..!

Read More

கண்ணா! ரெண்டாவது லட்டு திங்க ஆசையா! சூர்யாவின் சிங்கம்-2
by admin - 0


இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான பக்கா கமர்ஷியல் படம் சிங்கம். ஆறு, வேல் படங்களைத் தொடர்ந்து ஹரி - சூர்யா கூட்டணியின் மூன்றாவது படமான சிங்கம் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. அனுஷ்கா - சூர்யா ஜோடியின் பள பள ஆட்டம் பாட்டம் என கலெக்‌ஷனை அள்ளிக் குவித்தது.
சிங்கம் என்று அதே பெயரில் இந்தியில் ரீமேக் ஆனது படம். பாலிவுட்டிலும் படம் ஹிட்டானது. அதில் அஜய் தேவ்கன் - காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருந்தனர்.

அடுத்து தமிழில் சிங்கம் படத்தின் பார்ட்-2வில் ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்க இருக்கிறார். சிங்கம் படத்தின் ரீம் அனைவரும் இதில் மீண்டும் இணைகிறார்கள்.

அனுஷ்காவுடன் ஹன்சிகாவும் சேர்ந்து ரசிகர்களின் விழிகளுக்கு விருந்தளிக்க இருக்கிறார். விவேக், விஜயகுமார், ராதாரவி, நாசர் ஆகியோருடன் ரகுமான் மற்றும் பல கதாபாத்திரங்கள் இணைய உள்ளனர். காமெடிக்கு கூடுதலாக சந்தானமும் களமிறங்குகிறார்.

சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஹைத்ராபாத் மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் படபிடிப்பு நடக்க இருக்கிறது. இயக்குனர் ஹரி முதல் முறையாக பாடல் காட்சிகளையும் சண்டைக் காட்சிகளையும் தென் ஆப்ரிக்கா, கென்யா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் படமாக்க இருக்கிறாராம்.

முதல் பாகத்தில் ஆட்டம் போடும் இசையக் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத் தான் இதற்கும் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

சிங்கம் படத்தின் முதல் பாகத்தை விட சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பிரமாண்டமான ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஒரு லட்டு திண்ணவங்க ரெண்டாவது லட்டுக்கு ஆசைப் படுவது சகஜம் தானே!

Read More

April 25, 2012

5GBஇடவசதியுடன் Google Drive புதியவசதியை எப்படி உபயோகிப்பது விடியோ இணைப்பு
by admin - 0

அதிக வசதிகளை இணைய விரும்பிகளுக்கு செய்து வரும் கூகில் ஆனாது தற்பொழுது புதிய புரட்சியை எற்படுத்தி உள்ளது அதாவது 5GB வசதியுடய இணைய சேமிப்பை இலவசமாக வழங்குகிறது இதோ உங்களுக்காக இங்கே கிளிக் செய்யவும்
https://drive.google.com/start#notify
ஆனால் ஏற்கனவே இந்த வசதியை மூன்று வருடங்களுக்கு முதலேwww.hotmail.com வழங்கியுள்ளது கூறிப்பிடத்தக்கது
Read More

April 24, 2012

திருமண அழைப்பிதழ் தரும் சினேகா- பிரசன்னா!
by admin - 0


நடிகை சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் மே 11-ந்தேதி திருமணம் நடக்கிறது. இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடித்த போது காதலாகி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.

முகூர்த்த ஆடைகள், நகைகள் வாங்குதல் என இத்தனை நாள் தீவிரமாக இருந்தவர்கள், இப்போது திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வேலையில் மும்முரமாகியுள்ளனர்.

சக நடிகர், நடிகைகள், உறவினர்கள், நண்பர்களுக்கு தனித்தனியாக சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள்.

கடந்த சில தினங்களில் கமல், அஜீத், விஜய் போன்றோருக்கு பிரசன்னா நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைத்தார்.

இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், "விஜய், அஜீத் போன்றோரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைத்தேன். இருவரும் குடும்பத்தினருடன் என்னை சந்தித்தனர். வாழ்த்தும் சொன்னார்கள். சினேகாவிடம் டெலிபோனில் வாழ்த்து கூறினார்கள். கமல்ஹாசனை ஏற்கனவே சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தோம்," என்றார்.

ரஜினிக்காக காத்திருக்கிறோம்..

அடுத்து ரஜினிக்கும் அழைப்பிதழ் கொடுக்க காத்திருக்கிறார்கள் சினேகாவும் பிரசன்னாவும். கேரளாவில் கோச்சடையான் படப்பிடிப்பு முடிந்து ரஜினி வந்ததும் சந்தித்து அழைப்பு தருகின்றனர்.

கோச்சடையானில் ரஜினி தங்கையாக நடிக்கவிருந்து, பின்னர் நீக்கப்பட்டார் சினேகா என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

பிரபுதேவாவுடன் காதலா? த்ரிஷா பதில்!
by admin - 0



நடிகர் பிரபுதேவா கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி தன் வீட்டில் நெருங்கிய நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். மிட்-நைட் பார்ட்டியாக அரம்பித்து காலை வரை நீடித்த அந்த பார்ட்டியில த்ரிஷா, விஷால், ஜெயம் ரவி என பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

பிரபுதேவா கொடுத்த மிட்-நைட் பார்ட்டி! என்ற தலைப்பில் இணையதளத்திலும் அந்த
பார்ட்டியை பற்றிய தகவல் வெளிவந்தது. அதன் பின் பிரபுதேவா ’துன்பம் வரும் வேலையில் சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும். அது ஒரு பெண்ணாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என பேசினார்.

பார்ட்டியில் த்ரிஷாவுடன் பிரபுதேவா நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோ ஒன்றை த்ரிஷா தனது ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்டார். இந்த போட்டோவினால் பிரபுதேவா த்ரிஷாவுடன் இணைத்து கதை கதையாக பேசினார்கள்.

இதை பற்றி பேசிய த்ரிஷா “தெலுங்கில் எனக்கு பிரேக் தந்தவர் பிரபு தேவா. அவர் இயக்கிய முதல் 2 படங்களிலும் நான்தான் ஹீரோயின். அப்போது முதலே நாங்கள் நல்ல நண்பர்கள். இடையில் எப்போது சந்தித்தாலும் சகஜமாக பேசுவோம்.நட்பு காரணமாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினேன். அதனால் அவரது பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றேன்.
அதற்குள் ஏகப்பட்ட வதந்திகளை பரப்புகிறார்கள். நாங்கள் நண்பர்கள் என்பது எங்களுக்கு தெரியும். இது எனக்கு புதிதல்ல. இது பற்றி நான் கவலைப்படவும் இல்லை. இப்போது ‘சமரன்’ படத்தில் விஷாலுடன் நடிக்கிறேன்.

எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. மற்ற விஷயங்களை பற்றி யோசிக்கக் கூட என்னிடம் நேரம் இல்லை. ” என்று கூறினார்.

இப்போது கோடை வெய்யிலை சமாளிக்க ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார் த்ரிஷா.

Read More

April 23, 2012

ஆபத்தை தரும் facebook அவதானம் தேவை
by admin - 0

ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் தகவல்களை வெளியிட்டு, அதன் மூலம் மக்களை சிக்கவைத்து, அவர்களின் தனி நபர் தகவல்களைப் பெறும் முயற்சி இப்போது சமூக இணைய தளமான பேஸ்புக் பெயரில் நடைபெறுகிறது. இதனை சர்வே ஸ்கேம் (Survey Scam) என அழைக்கின்றனர். “இந்த பெண் கடற்கரையில் ஆயிரம் பேருக்கு முன்னால் என்ன செய்கிறாள் என்று பாருங்கள்’ என ஒரு செய்தி தரப்பட்டு ஒரு லிங்க் தரப்படுகிறது. இதில் கிளிக் செய்தால், பேஸ்புக் போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதன் முகவரியை உற்றுக் கவனித்தால் மட்டுமே அது போலியானது எனத் தெரியவரும். இங்கு ஒரு வீடியோவிற்கான இணைப்பு இருக்கும். வீடியோ பிளேயர் காட்டப்படும். உடனே அது படிப்படியாக மறைக்கப்பட்டு, இந்த வீடியோவினைப் பார்ப்பதற்கு உங்களுக்கு உரிய வயது ஆகிவிட்டதா என்ற கேள்வி கேட்கப்பட்டு, உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி எல்லாம் கேட்டு வாங்கப்படும். இதன் பின்னர், வேறு எதுவும் காட்டப்படாமல் தளம் நின்றுவிடும். நீங்கள் அளித்துள்ள தகவல்கள் மற்றவருக்கு விற்பனை செய்யப்படும். அவர்கள் இதனை தவறாகப் பயன்படுத்தும் வாப்புகள் ஏற்படும்.
மேலே தரப்பட்டுள்ளது போல பலவகையான செய்திகள் ஸ்கேம் ஆகப் பரவத் தொடங்கி உள்ளன. இது போன்ற ஆர்வமூட்டும் தகவல்களைக் கண்டால் சற்று எச்சரிக்கையுடன் விலகுவது நல்லது.


Read More

இரு ஆண்டுகளுக்குள் இரண்டாகும் இலங்கை ஐ.நா. படை இதை அரங்கேற்றும்
by admin - 0


ஜெனிவாத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும், அரசியல் தீர்வை வழங்குவதற்கும் அரசு தவறினால் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நாடு இரண்டாகப் பிளவுபடும் சூழ்நிலை ஏற்படும். ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வடக்கு, கிழக்கிற்குச் சென்று இதனை அரங்கேற்றும் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.


எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நவசிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரா இது தொடர்பாகத் தெரிவித்ததாவது
ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரியும், அரசியல் தீர்வை உடனடியாக முன்வைக்கக் கோரியும் நாம் நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றோம்.

கொழும்பில் மாத்திரம் குவிந்து கிடக்கும் அதிகாரம், மாவட்ட மட்டத்தில் பகிரப்படவேண்டும். வடக்கு, கிழக்கிற்குத் தேவையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

ஜெனிவாத் தீர்மானத்திற்கமைய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப் படுத்த முடியாவிட்டால், அரசு அந்தப்பணியை எம்மிடம் ஒப்படைத்து விட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

அரசியல் தீர்வை வழங்கினால் விமல் வீரவன்ஸ மற்றும் குணதாஸ அமரசேகர ஆகியோர் தன்னை ஆட்சியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்று ஜனாதிபதி அஞ்சுகிறார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜெனிவாவில் அடித்துக்கூறிவிட்டு மீண்டும் சர்வதேசத்தையும், நாட்டு மக்களையும் ஜனாதிபதி ஏமாற்றிக்கொண்டிக்கின்றார் என்றார்.

ருஹுணு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அருண சொய்சா கூறியவை வருமாறு:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாட்டைப் பார்க்கும்போது இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இந்த நாடு இரண்டாகப் பிரியும் அபாயம் உள்ளது. அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று சர்வதேசத்திடம் கூறிவிட்டு அதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கொடுத்த வாக்குறுதியை அப்படியே கிடப்பில் போடும் செயலில்தான் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார்.

ஜெனிவாத் தீர்மானத்தை தொடர்ந்து சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் சர்வதேசம் எமது நாட்டுக்குள் ஐ.நா. அமைதிப்படையை அனுப்பி வடக்கு, கிழக்கு மக்களின் அபிலாஷைகளை அறிவதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்தலாம். அப்போது அந்த மக்கள் வடக்கு, கிழக்கைப் பிரித்துத் தருமாறு கூறுவர். இந்த நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் அரசு அரசியல் தீர்வை வழங்கவேண்டும் என்றார்.

Read More

யாரையும் பார்க்க விடாதீங்க... கண்டிஷன் போடும் தமன்னா!
by admin - 0


மழைக் காட்சிகளில் கவர்ச்சிகரமாக நனைந்து நடிக்க தமன்னா ரெடியாம். ஆனால் அதற்கு ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போடுகிறார். அதாவது, மழைக் காட்சிகளை படமாக்கும்போது அங்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். இதற்கு ஒத்துக் கொண்டால், அவருக்கு ஓ.கேதானாம்.

நடிகை தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவர் தெலுங்கில் கை நிறைய படங்கள் வைத்துள்ளார். படங்கள் தவிர விளம்பர படங்களிலும் நடிக்கும் வாய்ப்புகளும் அதிகரி்த்துள்ளது. விளம்பரப் படங்களில் அவர் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்க முன்னணி நிறுவனங்கள் தயாராக உள்ளன. அதனால் அவர் ரொம்பவே குஷியாக உள்ளார்.

தமன்னாவுக்கும் மழைக்கும் அவ்வளவு ராசி. அவர் நடிக்கும் படங்களில் ஒரு பாட்டுக்காவது அவருக்கு வெள்ளை கலர் டிரஸ் கொடுத்து மழையில் ஆட்டம் போட வைக்கின்றனர். தமிழில் அவர் கார்த்தியுடன் ஆடிய அடடா மழைடா, அடைமழைடா பாட்டை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

மழைக் காட்சிகளைப் படமாக்கும்போது ஈரம் சொட்ட சொட்ட ஆடும்போது அங்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அவர் இயக்குனர்களுக்கு உத்தரவு போடுகிறார். அவர் உத்தரவு போடுவது சரி பார்வையாளர்களை இயக்குனர்கள் எப்படி கட்டுப்படுத்தப் போகிறார்களோ?



Read More

April 21, 2012

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!
by admin - 0



இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேஷியாவின் பப்புவா மற்றும் நியூ கினியா பகுதியில் உள்ள மனோக்வாரியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தில் வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் விவரம் குறித்து ஓரளவு தகவல்கள் கிடைத்துள்ளன. ரான்சிங்கி என்ற பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சில வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பள்ளிக்கட்டடம் ஒன்று ஆடியதால் குழந்தைகள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

மேற்கு பப்புவா பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. இந்த பகுதி ஹோட்டல்களில் தங்கியிருந்த ஏராளமான வெளிநாட்டினர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

முந்தைய நிலநடுக்கங்களோடு ஒப்பிடுகையில் இது குறைந்த அளவிலானது என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.


Read More

தமன்னாவை சந்திக்க
by admin - 0

ஃபேண்டா கூல்டிரிங்க்ஸ் குடித்தால்
நடிகை தமன்னாவை சந்திக்கும்
வாய்ப்பு கிடைக்கும். கொக கோலா நிறுவனத்தின்
கூல்டிரிங்கான ஃபேண்டாவின்
தென்னிந்திய பிராண்டு அம்பாசிடராக
நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகை ஜெனிலியா திருமணமாகிப்
போனதையடுத்து தான் தமன்னா பிராண்டு அம்பாசிடராகியுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்
தனது வாடிக்கையாளர்களைக் கவர
ஃபேண்டா புது முயற்சியில்
இறங்கியுள்ளது. தமிழகம் மற்றும்
கர்நாடகாவில் விற்கப்படும்
ஃபேண்டா பாட்டில்களின் லேபிலுக்குப் பின்னால் வாடிக்கையாளர்களைக் கவரும்
வகையில் பரிசுகள்
அறிவிக்கப்பட்டுருக்கும். நீங்கள்
அதிர்ஷ்டசாலியாக இருந்தால்
தமன்னாவை சந்தி்ககும் வாய்ப்பு கிடைக்கும். ஃபேண்டா விளம்பர நிகழ்ச்சிகளில
தமன்னா கலந்துகொள்கிறார். அவர்
தனது ரசிகர்களை விளம்பர
நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பேசவிருக்கிறார்.
தமன்னாவை பார்ப்பதோடு மட்டுமல்லாமல்
அழகிய செல்போன்கள் உள்பட பல பரிசுகளை வெல்லலாம். என்ன ஃபேண்டா வாங்கியாச்சா?
Read More

April 19, 2012

ரஜினிக்காக தனுஷை மன்னிச்சிட்டேன்
by admin - 0


கொலைவெறி பாட்டுக்கு நடனமாட தன்னை ஒப்பந்தம் செய்து ஏமாற்றிய தனுஷை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக மன்னித்துவிட்டேன், என்று கூறியுள்ளார் நடிகை ராக்கி சாவந்த்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்தில் அவரது கணவர் தனுஷ் பாடிய 'கொலை வெறி' பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் கொலை வெறி பாடலுக்கு தனுஷுடன் ஆட இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி ஷாவந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ராக்கி ஷாவந்த், மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனுஷை கடுமையாகச் சாடினார்.

அப்போது அவர், "கொலை வெறி பாடலுக்கு நடனம் ஆட மிகவும் ஆர்வமாக இருந்தேன். அந்த பாடலுக்கு நடனம் ஆட என்னை ஒப்பந்தம் செய்து விட்டு கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. என்னை நம்ப வைத்து மோசம் செய்து விட்டார் தனுஷ்'' என்று தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

ஆனால் இப்போது கூலாகிவிட்டார் ராக்கி. நேற்று நிருபர்களிடம் அவர் கூறுகையில், "கொலைவெறி' பாட லுக்கு நான் தனுஷுடன் சேர்ந்து நடனம் ஆடி இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எனக்கு அந்த வாய்ப்பு பறிபோனதால் அவரை திட்டினேன். இப்போது மன்னித்து விட்டேன்.

ரஜினி சாரை நான் மிகவும் மதிக்கிறேன். அவருக்காக தனுஷை விட்டுவிடுகிறேன். அந்தப் பாட்டும் எனக்குப் பிடித்திருந்தது. நான் திரையுலகிற்கு வந்த போது எனக்கு வழிகாட்டி என்று யாரும் கிடையாது. எனக்கு நானே வழிகாட்டி. தனுஷ் இந்தியில் நடிக்க வருகிறார். அவருக்கு வாழ்த்துகள்," என்றார்.

Read More

கண்டம் விட்டு கண்டம் பாயும் 'அக்னி-5' ஏவுகணை சோதனை வெற்றி
by admin - 0

புவனேஸ்வர்: 5,000 கிமீ வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி V ஏவுகணை இன்று காலை 8.05 மணிக்கு ஒரிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5,000 கிலோமீட்டர் தூரம் வரை இது பாயக் கூடியது. ஒரு டன் எடை கொண்ட அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா மட்டும் தான் இதுவரை வைத்திருந்தன. தற்போது அந்த பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

அக்னி ஏவுகணை நேற்று இரவு 7 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வானிலை சரியில்லாத சூழலால் இன்று காலை ஏவப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி 4 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது.

அக்னி V ஏவுகணையின் மூலம் சீனா முழுவதையும் நமது தாக்குதல் இலக்குக்குள் கொண்டு வர முடியும். அத்தோடு நில்லாமல், ஐரோப்பாவின் பல நாடுகளையும் கூட நம்மால் தாக்க முடியும்.

திபெத் எல்லைப் பகுதியில் சீனா ஏவுகணைகளைக் குவித்து வரும் நிலையில் இந்தியாவின் அதிநவீன அக்னி ஏவுகணை சோதனை குறிபிடத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது
Read More

அம்பலம் ஆகும் யாழ் பல்கலைகழக பக்கசார்புகள்-அதிர்ச்சி தகவல்கள்
by admin - 0

இரக்கமற்ற பகிடிவதைகள், யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் அனைத்தும் முள்ளிவாய்க்காலில் தப்பிப் பிழைத்த மாணவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது வெறும் தற்கொலை என்று மட்டுமே அனைத்து ஊடகங்களும், உயிரிழப்புடன் சம்பந்தப்பட்டவர்களும் முடித்து விட்ட யாழ் பல்கலைக்கழக மாணவியின் கொலை தொடர்பாகப் பல திடுக்கிடும் விடயங்கள் தற்போது கிடைத்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் தப்பி வந்த போதும் யாழ் பல்கலைக்கழகத்தின் இரக்கமற்ற மனங்களில் இருந்து தப்பிவிட முடியவில்லை என்ற நிலைதான் அனேக வன்னி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இரக்கத்தனமற்ற பகிடிவதை, அதற்கும் அப்பால் மாணவர்களை தற்கொலை வரை தூண்டும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ்த்தரமான நடவடிக்கைகள் என கொடுமைகள் நீண்டு செல்கின்றன.

கடந்த வாரத்திலும் இதற்கு உதாரணமான சம்பவங்கள் உண்டு.பெளஜிகா என்ற யாழ்.பல்கலைக் கழகத்தின் 3ம் வருட பொருளியல் துறை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் நேற்று வெளிவந்தன.

இது குறித்து ஆழ விசாரித்ததில் அந்த மாணவியை தற்கொலை செய்ய தூண்டியது பல்கலைக்கழக நிர்வாகமும் அவரின் உறவினருமே என்ற தகவல் வெளிவந்திருக்கின்றது.

குறித்த மாணவி 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்ததின் போது தனது தாய் தந்தை உள்ளிட்ட அனைத்து குடும்ப அங்கத்தவர்களையும் இழந்திருக்கிறார்.

முன்னாள் போராளியான குறித்த மாணவி போர்ச்சூழலில் படுகாயப்பட்ட நிலையில் நலன்புரி நிலையம் வந்துள்ளார். அதிலிருந்து ஏற்கனவே கிடைத்திருந்த பல்கலைக்கழக அனுமதியினால் (உயர்தரம் – 2007) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர்ந்தார்.

அரச சார்பற்ற நிறுவனங்களும் பல்கலைக்கழகமும் வெளிநாட்டிலிருக்கும் ஒன்றுவிட்ட சகோதரனும் செய்த உதவிகளால் தான் கல்வியைத் தொடர்ந்திருக்கின்றார்.

ஆயினும் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பல தடவைகள் நண்பிகளிடம் அழுதரற்றியிருக்கிறார். காலம் செல்ல செல்ல உற்றாரை இழந்ததன் துயரத்தை அனுபவித்து இரவிரவாக அழுதிருக்கிறார். அவ்வேளைகளில் பல்கலைக்கழக விடுதி நண்பிகள் ஆதரவாயிருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த ஆண்டில் யாழ் பல்கலைக்கழகத்துக்கு அதிகரித்த சிங்கள மாணவர்களின் வருகையினால் இடப்பற்றாக்குறையை காரணம் காட்டி விடுதி நிர்வாகம் முதலாம் மற்றும் இறுதி வருட மாணவர்களை மட்டும் விடுதியில் தங்க அனுமதியளித்துள்ளது. ஏனைய வருட மாணவர்கள் குறித்த திகதிக்குள் வெளியேறும்படி பணிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த மாணவி தனது நிலையை பல்கலைக்கழக மாணவர் நலன்புரி பதிவாளரிடம் பல தடவைகள் எடுத்துகூறியும் கடிதம் எழுதியும் வந்துள்ளார்.

ஆயினும் வெளியில் வாடகை அறை எடுத்து தங்கும் படியும் அதற்கான வாடகையை தாம் பொறுப்போற்பதாகவும் கூறி பல்கலைக்கழக நிர்வாகம் அவரின் தயை கூர்ந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.

ஏற்கனவே தனக்கு யாரும் இல்லை என அடிக்கடி சொல்லி வேதைனைப்படும் மாணவி வேறு வழியின்றி வாடகை அறைக்கு போய் சிலகாலம் தனிமையில் இருந்திருக்கின்றார்.

அப்போது நண்பிகளைக் காணும் போதெல்லாம்தான் தனித்து விடப்பட்டிருப்பதை பற்றி அதிக வேதனைப்பட்டு அழுதிருக்கின்றார். தான் அம்மாவிடம் போகப் போவதாக சொல்லியிருக்கிறார் (தாயாரும் உயிருடன் இல்லை).

இந் நிலையில் வவுனியாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். குறித்த உறவினர்களுக்கு மாணவி தொடர்பில் ஈடுபாடு இல்லை எனவும் இவருக்கு பணம் அனுப்புவது அந்த வீட்டுச் சகோதரன் என்பதால் உறவினருக்கு இவர் மீது வெறுப்பிருந்தது எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் மிகவும் உளத்தாக்கத்துக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருக்கின்றார். தற்கொலை என்பதில் கூட சந்தேகம் உண்டு.

இதற்கு முதலும் இறுதிக் கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்டு உளத்தாக்கத்துக்குள்ளான மாணவனொருவனை யாழ்.பல்கலைக்கழகம் இழந்திருந்தது.

இது இரண்டாவது. முள்ளிவாய்க்காலே பாதுகாத்து அனுப்பிய இன்னும் எத்தனை மாணவர்களை யாழ்.பல்கலைக்கழகம் பலியெடுக்கப்போகிறதோ? என்ற ஏக்கம் சக மாணவர்களைத் தாக்கியிருக்கின்றது.
c
சமூகத்தின் உயர் நிலைக் கல்வியை வழங்கிவருகின்ற யாழ்.பல்கலைக்கழகம் மாணவர்களின் நலனிலும் அவர்களது உள நிலையிலும் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இன்னும் பல உயிர்ப் பறிப்பக்களைத் தடுப்பதற்கு தம்மாலான ஒத்துழைப்புக்களையாவது வழங்கினாலே ஏதிலிகளுக்கு போதுமானதாக அமையும்
CNN tamil news

Read More

April 18, 2012

3 பட வியாபாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை - ரஜினி அறிக்கை
by admin - 0


3 படத்தின் வர்த்தகத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்புமில்லை. இதுகுறித்து வெளியானவை பொய்ச் செய்திகள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்க, மருமகன் தனுஷ் - ஸ்ருதி நடித்த 3 படத்தின் தெலுங்கு வெளியீட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால, அதை ஈடுகட்டுவதில் உதவ ரஜினி முன்வந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

இது முழுக்க தவறான செய்தி என ரஜினியே தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

எனது மகள் ஐஸ்வர்யா இயக்கி, தனுஷ், ஸ்ருதி நடித்து சமீபத்தில் வெளியான `3' திரைப்படத்தில் வியாபார ரீதியாக என்னை சம்பந்தப்படுத்தி ஒரு பொய்யான செய்தி வெளியாகி உள்ளது. அந்த படத்திற்கும், எனக்கும் வியாபார ரீதியாக எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆகவே திரைப்பட வினியோகஸ்தர்கள் யாரும், என்னை சம்பந்தப்படுத்தி வெளிவரும் பொய்யான செய்திகளை நம்பவேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Read More

April 17, 2012

தனுஷ், ஐஸ்வர்யாவைச் சூழ்ந்த 3 சிக்கல்- கை கொடுக்கும் சூப்பர் ஸ்டார்!
by admin - 0


தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பிலும், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்திலும் உருவாகி பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான 3 படம் பிளாப் என்பது கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமாகி விட்டது. தெலுங்கில் இந்தப் படம் மிகப் பெரிய அடியை வாங்கியுள்ளதாம். இதனால் நாலாபுறமும் தனுஷை நிதி சிக்கல் நெருக்க ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மருமகனை இந்த சிக்கலிலிருந்து காக்க கை கொடுத்துள்ளாராம்.

கொலவெறி பாடல் ஏற்படுத்திய மிகப் பெரிய ஹைப் மற்றும் பரபரப்புக்கு மத்தியில் வெளியான 3 படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் படம் நன்றாகப் போவதாக செய்திகள் வெளியானாலும் கூட படம் பிளாப் என்று இப்போது வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான தியேட்டர்கள் காற்று வாங்க ஆரம்பித்துள்ளதாம். வார இறுதி நாட்களிலும் கூட பல தியேட்டர்களில் திணறித் திணறித்தான் கூட்டம் கூடுகிறதாம்.

இந்த நிலையில் 3 படத்தால் சிக்கல்களில் சிக்க ஆரம்பித்துள்ளாம் தனுஷ் குடும்பம். இந்தப் படத்தை தனுஷ் குடும்பம்தான் தயாரித்துள்ளது என்பது நினைவிருக்கலாம். குறிப்பாக தெலுங்கு விநியோகஸ்தர் நட்டி குமாரால் சிக்கல் உருவெடுத்திருப்பதால், மகளையும், மருமகனையும் பத்திரமாக காப்பாற்ற சூப்பர் ஸ்டார் ரஜினியே களத்தில் குதிக்க நேரிட்டுள்ளதாம்.

ரஜினிகாந்த் இப்படி பண உதவி செய்வது என்பது புதிதல்ல. ஏற்கனவே குசேலன் படம் தொடர்பாக இப்படி ஒரு சிக்கல் வந்தபோது சற்றும் தயக்கமில்லாமல் நஷ்டக் கணக்கை தனது சொந்தப் பணத்தை வைத்து சரி செய்து கொடுத்து அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளியவர் அவர் என்பது நினைவிருக்கலாம். தற்போது மருமகன் தனுஷுக்கும் அவர் கை கொடுத்துள்ளாராம்.

3 படத்தின் ஆந்திர விநியோக உரிமையை வாங்கியவரான நட்டி குமார்தான் 3 படம் தொடர்பாக முதல் குண்டைப் போட்டவர். தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதற்கு தனுஷ், ஐஸ்வர்யாதான் காரணம் என்றும் பரபரப்பாக குற்றம் சாட்டினார் நட்டி. ரூ. 4 கோடிக்கு இந்த நட்டி குமார் படத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.

3 படம் தொடர்பாகவும், நட்டி குமாரின் குற்றச்சாட்டு காரணமாகவும் வெளி வரும் செய்திகள் ரஜினியை அப்செட் செய்துள்ளதாம். இதை அவர் விரும்பவில்லையாம். எனவே இந்தப் பிரச்சினை சட்டென்று சரி செய்து விட வேண்டும் என்று அவர் விரும்புகிறாராம். இதனால் நஷ்டப் பணத்தைக் கொடுத்து பிரச்சினையை தீர்க்குமாறும், அந்தப் பணத்தைத் தானே தருவதாகவும் ஐஸ்வர்யா, தனுஷிடம் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக நட்டி குமார் தனது மகள், மருமகனால் நஷ்டப்பட்டுப் போனேன் என்று கூறியது ரஜினியை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாம். இதையடுத்தே இந்த முடிவுக்கு வந்தாராம் ரஜினி. ரஜினியின் இந்த முடிவை ஐஸ்வர்யாவும், தனுஷும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினியே நட்டியைத் தொடர்பு கொண்டு நஷ்டத்தை சரி செய்வதாக உறுதியளித்துள்ளாராம்.

இந்த செய்திகள்தான் இப்போது கோலிவுட்டை பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இதுதொடர்பாக ரஜினி தரப்பிலோ அல்லது ஐஸ்வர்யா தரப்பிலோ அல்லது நட்டி தரப்பிலோ யாரும் உறுதிப்படுத்தவும் இல்லை, மறுப்பு வெளியிடவும் இல்லை.

Read More

April 16, 2012

கிளிநொச்சி முக்கொம்பன் பகுதியில் இலைப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
by admin - 0



கிளிநொச்சி முக்கொம்பன் பகுதியில் கன்னிவெடியகற்றும் பிரிவில் வேலைபுரியும் இளைஞர்களால் "இலைப்பூச்சி" எனும் அரியவகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ் இலைப்பூச்சியானது பார்க்கும் அனைவரும் வியக்கும்வண்ணம் சிறிய இலை போன்றே காட்சியளிக்கின்றது.

Read More

April 15, 2012

தி.மு.க and அ.தி.மு.க இணைவு -அரசியல் அதிர்ச்சி
by admin - 0

இலங்கை விஜயம் செய்யும் எம்.பி.க்கள்
குழுவில் இருந்து தி.மு.க.வும்
விலகியுள்ளது. இதனை தி.மு.க. தலைவர்
கருணாநிதி தெரிவித்துள்ளார். லோக்சபா பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ்
தலைமையிலான, 15 எம்.பி., க்கள் அடங்கிய
குழு, நாளை (16ம் திகதி) ஐந்து நாள் பயணமாக
இலங்கை வரவுள்ளது. இந்நிலையில் தி.மு.க.தலைவர்
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை இலங்கை விஜயம் செய்யவுள்ள
எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க.வும்
இடம்பெறாது என்றார். முன்னதாக அ.தி.மு.க. எம்.பி.
இலங்கை செல்லமாட்டார் என முதல்வர்
ஜெ.கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

அஜீத்துடன் போட்டியா? - விஜய் பதில்
by admin - 0


அஜீத்துக்கும் எனக்கும் சினிமாவில் நீயா நானா போட்டி இருந்தாலும், நிஜத்தில் அப்படி எதுவும் இல்லை என்றார் நடிகர் விஜய்.

ரஜினி, கமல் படங்களுக்குள் போட்டி இருப்பதுபோல் விஜய், அஜீத் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவர் படங்களும் ரிலீசாகும்போது அவரவர் ரசிகர்கள் போட்டி போட்டு கொடி தோரணங்கள், கட் அவுட்கள் என அமைப்பதோடு, சமயத்தில் எல்லை மீறி அடிதடி வரை போகின்றனர்.

அஜீத் உங்களுக்கு போட்டியா? என்று விஜய்யிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், "அஜீத்தும் நானும் தொடர்பில் இருக்கிறோம். நிறைய விஷயங்கள் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறோம். இருவர் படங்கள் குறித்தும் பேசுவோம்.

அவர் என் வீட்டுக்கு வருவார். நான் அவரது வீட்டுக்கு செல்வது உண்டு. எங்கள் இருவரது குழந்தைகளும் ஒரே பள்ளிக்கு செல்கின்றனர்.

சினிமாவில் எங்களுக்குள் லேசாக நீயா நானா போட்டி இருக்கலாம். திரையுலகில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லதுதானே. ஆனால் நிஜத்தில் நல்ல நண்பர்கள்," என்றார்.

இப்போது துப்பாக்கி படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்து கவுதம் மேனனின் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' என்ற படத்தில் நடிக்கிறார்

Read More

April 14, 2012

இந்தியாவில் ராணுவ புரட்சி -பாதுகாப்பு அமைச்சர் மறுப்பு
by admin - 0

இந்தியாவில் ராணுவப்
புரட்சிக்கு முயற்சிகள் நடந்ததாக
வெளிவந்துள்ள செய்தியை பிரதமர் மன்மோகன்
சிங் மறுத்துள்ளார். இந்திய ராணுவத்திற்கு களங்கம் ஏற்படுத்த
முயற்சிப்பது சரியல்ல என்று பிரதமர்
மன்மோகன் கூறியுள்ளார். வயது பிரச்சனை தொடர்பாக உச்ச
நீதிமன்றத்தில் ராணுவ தளபதி வி.கே.சிங்
வழக்கு தொடர்ந்திருந்தபோது மத்திய
அரசுக்கு தெரிவிக்காமல் கடந்த ஜனவரியில்
ராணுவத்தின் இரண்டு பிரிவுகள் தலைநகர்
டெல்லியில் குவிக்கப்பட்டதாகஇந்தியன் எக்ஸ்பிரஸ்
பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து உடனடியாக
பாதுகாப்பு அமைச்சர் மற்றும்
பிரதமருக்கு உளவுத்துறை தகவல்
கொடுத்ததாகவும், அதன் பிறகு அந்த
ராணுவப் பிரிவுகள்
தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை இதனை பிரதமர் மன்மோகன்
சிங்கும், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.
ஆண்டனியும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
ராணுவ தளபதியின் பதவியை யாரும்
கொச்சைப்படுத்த முயலக் கூடாது என்றார். ஆண்டனி கூறுகையில், ராணுவத்தின்
இதுபோன்ற நடமாட்டம் ஒன்றும் புதிதல்ல,
வழக்கமானதுதான்.
ஜனநாயகத்தை சீர்குலைக்கும் எந்த
நடவடிக்கையிலும் இந்திய ராணுவம்
இறங்காது. ராணுவத்தின் நாட்டுப்பற்று குறித்து எவரும் சந்தேகம் எழுப்ப
முடியாது. ராணுவத் தளபதியின்
அலுவலகத்தையும், இந்திய ஜனநாயகத்தையும்
இந்தச் செய்தி கொச்சைப்படுத்துவதாகவும்.
ராணுவம், கடற்படை,
விமானப்படை ஆகியவற்றின் அர்ப்பணிப்பு உணர்வு குறித்து தாம் பெருமிதம்
கொள்வதாகவும், .நமது ராணுவத்தின்
மதிப்பையும் மரியாதையையும் குறைக்கும்
வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடக்
கூடாது என்றார். ஆண்டனியை பதவி நீக்கம் செய்ய பாஜக
கோரிக்கை: இந் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர்
ஆண்டனியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
என்று பாஜக வலியுறுத்தி உள்ளது. பிரதமர்
இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்
என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும்
கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More

அதிரும் யாழ்ப்பாணம் இன்றும் இரண்டு சகோதரிகள் கிணற்றில் சடலமாக மீட்பு
by admin - 0

யாழ்.கோண்டாவில் பகுதியில்
பெண் சகோதரிகள் இருவர்
இன்று காலை தூக்கிட்டும்,
கிணற்றில் குதித்தும்
தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது. சகோதரிகளான ச.கீதாஞ்சலி (வயது42),
ச.சுவர்ணலதா (வயது40) ஆகிய
இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது அறையில் மின்விசிறியில்
தூக்கிட்டு கீதாஞ்சலி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எனினும் நீண்டநேரம் வெளியே வராமையினால் வீட்டில்
இருந்தவர்கள் சந்தேகத்தில்
அறையை உடைத்து திறந்துள்ளனர். அப்போதே கீதாஞ்சலி தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த
அவரது சகோதரி சுவர்ணலதா வீட்டின் பின்னாலுள்ள
கிணற்றில்
வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதேவேளை கீதாஞ்சலி கொக்குவில்
இந்துக்கல்லூரி ஆசிரியை எனவும்,
சுவர்ணலதா கொட்டடி நமசிவாயம் வித்தியாலய
ஆசிரியை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவத்தினால் கோண்டாவில்
பகுதி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இதனையடுத்து கோப்பாய் பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர்
சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில்
ஒப்படைத்துள்ளனர்.
Read More

பில்லா 2 trailer விடியோ
by admin - 0



Read More

April 13, 2012

நாளை முதல் விஜய்யின் துப்பாக்கி ஆக்‌ஷனில்!
by admin - 0


நடிகர் விஜய்யின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் விஜய் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள்(First Look) நாளை வெளியிடப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் ரசிகர்களால் எழுதி இசையமைக்கப்பட்ட ”இளையதளபதி விஜய்” ஆல்பத்தை நடிகர் விஜய் வெளியிட்டார். ஆல்பத்தை வெளியிட்டு பேசிய விஜய் “ துப்பாக்கி படத்தின் First Look போஸ்டர்கள் சித்திரைத் திருநாளன்று(நாளை) வெளியிடப்படும். படம் நன்றாக வந்துள்ளது” என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய விஜய் “ நடந்து கொண்டிருக்கும் 10-வது, 12-வது வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடத்தை பிடிப்பவர்களுடன் ஒரு நாள் முழுக்க மகிழ்ச்சியாக கொண்டாடப்போகிறேன்” என்று அறிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் நன்றாக படிக்கும் மாணவர்கள் இதை நினைத்துக் கொண்டே தேர்வில் கவனம் செலுத்தாமல் போய்விடுவார்களோ என்ற அச்சம் பெற்றவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.நடிகர் விஜய் இந்த அறிவிப்பை தேர்வு முடிந்ததும் அறிவித்திருக்கலாம் என்பது மக்களின் கருத்து.

படத்தின் இயக்குனர் முருகதாஸும் சென்னையில் தான் உள்ளார். கே.கே நகரில் தெருவிளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டிருப்பதை பார்த்த முருகதாஸ் அதை போட்டோ எடுத்து தனது ட்விட்டர் அக்கவுண்டில் பதிவு செய்துள்ளா


Read More

இலங்கை அருகே புதிய புவிதட்டு உருவாகிறது!
by admin - 0

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடபகுதியின் மேற்கு கரையில் நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.9 என்ற அளவில் அது பதிவானது.

இதனால் இந்தியா, உள்ளிட்ட பல நாடுகளில் பூமி குலுங்கியது. இதனால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தினால் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணியளவில் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டது.

கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பேரலைகள் உருவாகி ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகினர்.


ஆனால் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது புவி சிறு தட்டுகளில் அதிர்வு ஏற்பட்டது. இருந்த போதும் சுனாமி பேரலைகள் தோன்றவில்லை. இதற்கு புவிதட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதே காரணம் என இங்கிலாந்து புவியியல் நிபுணர் ரொகர் மியூசன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட பெரும்பாலான நில நடுக்கங்களால் நிலைமை மாற்றம் அடைந்துள்ளது. இதனால்தான் சுனாமி ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

புவி 12 தட்டுகளால் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது புதிதாக 13-வது புவிதட்டு ஒன்று உருவாகி வருவதாக இலங்கையின்
புவியியல் துறை பேராசிரியர் கபில தஹாநாயக்க தெரிவித்துள்ளார். இது இலங்கை அருகே உருவாகி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா- ஆஸ்திரேலியாவின் புவித்தட்டில் இலங்கை உள்ளது. அதே நேரத்தில் உலகில் அதிக நிலநடுக்கம் உருவாகின்ற ஜப்பான் பசிபிக் புவிதட்டின் மீது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Read More

April 12, 2012

தென்கொரியத் தலைநகர் சியோலுக்கு மேலால் பறந்த பறக்கும் தட்டால் பரபரப்பு! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு
by admin - 0

UFO எனப்படும் பறக்கும் தட்டு விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பறந்து கொண்டிருந்த ஜெட் விமானத்திலிருந்து சில செக்கன்கள் எடுக்கப்பட்ட வீடியோவே மேற்படி சர்ச்சைகளுக்கு காரணமாகும்.

இந்த வீடியோவானது தென்கொரியத் தலைநகரான சியோலுக்கு மேலால் பறந்து கொண்டிருந்த ஜெட் விமானத்தில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வேற்றுக் கிரக வாசிகள் பூமியை நோட்டம் விட வந்துள்ளனரா என்ற சந்தேகம் வானியல் அறிஞர்களிடையே எழுந்துள்ளது.

விமானத்தில் இருந்த சுற்றுலாப் பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட மேற்படி வீடியோ கடந்த சனிக்கிழமை அன்று Youtube இல் தரவேற்றப்பட்டுள்ளது.

குறித்த வீடியோவை ஏராளமானோர் பார்த்து இரசித்துள்ளனர்.

Read More

யாழில் இரு நாட்களில் மூன்று இளம் பெண்களின் சடலம் மீட்பு! மக்கள் மத்தியில் அதிர்ச்சி !
by admin - 0


யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் இளம் பெண்களின் மரணங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வியாழக்கிழமை (12) யாழ்.மானிப்பாய் பகுதியிலுள்ள வயல்கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலத்தை மானிப்பாய் பொலிஸார் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

ஆனந்தா வீதி பெரியபுலம் மானிப்பாயைச் சேந்த 20 வயதான லதாரூபன் சாளினி என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரது மரணத்திற்கு காதல் விவகாரம் என அயலவர்களினால் தெரிவிக்கப்படுகின்றபோதும் அதன் உண்மை நிலமை தெரியவரவில்லை.

சம்பவ இடத்திற்கு சென்ற மல்லாகம் நீதிவான் சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு மானிப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை யாழ். அச்சேழுப் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவருடைய சடலத்தை கோப்பாய் பொலிஸார் நேற்றுப் புதன்கிழமை மாலை 5 மணியளில் கண்டுபிடித்துள்ளனர்.

கே.தங்கமணி (வயது 23) என்ற இளம்பெண்ணே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் மனநிலை பாதிக்கப்பட்டு வீடு ஒன்றில் தங்கவைக்கப்பட்டு இருந்த நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அடுத்து உறவினர்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவலை கொடுத்ததை அடுத்து சடலம் கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இத்தோடு யாழ்.இணுவில் பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இருநாட்களில் மூன்று இளம் பெண்பிள்ளைகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது யாழ். சமூகத்தில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது உளநல ஆலோசனைகள் பாடசாலை மட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆவலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


Read More

நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
by admin - 0

“அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்குதை(சுறவம்) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”
பாவேந்தர் பாரதிதாசன்: “தையே முதற்றிங்கள்; தைம்முதல் ஆண்டு முதல் பத்தன்று நூறன்று; பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில் புத்தாண்டு தைம்முதல்நாள் பொங்கல் நன்னாள்”
“நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே”
“அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”
தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல தை முதல் நாளே!
சித்திரை முதல் நாள் ஆண்டுப் பிறப்பென்பதும், பிரபவ முதல் அட்சய வரையிலான 60 சுழலாண்டு முறையும் பார்ப்பனியம் திணித்த அறிவுகெட்ட முறையாகும்.
இதையும் ஆய்வு செய்து நம் அறிஞர்கள் 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஒரு புதிய முடிவுக்கு வந்தார்கள். தமிழறிஞர் மறைமலை யடிகள் தலைமையில் அக்கூட்டம் நடந்தது. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது அதையே தமிழ் ஆண்டு எனக் கடைப்பிடிப்பது.
திருவள்ளுவர் காலம் கி.மு. 31, தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்யப் பட்டது. பின்னர் 18.11.1935இல் திருவள்ளுவர் கழகத்தினர் நடத்திய திருவிழாவிற்குத் தலைமை வகித்த மறைமலையடிகள் மீண்டும் இதை உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு கிருத்து ஆண்டுடன் 31ஐக் கூட்டிக் கணக்கில் கொள்ள வேண்டும். 2011 + 31 = 2042.
நாமும் இதைச் செயல்படுத்துவோம்.
தமிழயரத் தாழ்ந்தான் தமிழன்; அவனே
தமிழுயரத் தானுயர்வான் தான் – பாவாணர்
ஆம் தோழர்களே, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் திருவிழா இரண்டும் தை முதல் நாளே.

Read More

2004-2012 இந்தோனேசிய பூகம்பங்கள்: வெறும் 3 கிலோமீட்டர் வித்தியாசம்தான்!
by admin - 0


இந்தோனேசியாவில் 2004ம் ஆண்டு ஏற்பட்ட அதி பயங்கர நிலநடுக்கத்திற்கும், நேற்று ஏற்பட்ட பூகம்பத்திற்கும் இடையே நிறைய ஒற்றுமைகளும், ஓரிரு வித்தியாசங்களும் உள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2004ம் ஆண்டு ஏற்பட்ட மிக பயங்கர நிலநடுக்கமானது பெரும் சுனாமி பேரலைகளை கொண்டு வந்து இந்தியப் பெருங்கடல் நாடுகளை சீரழித்து விட்டுப் போனது. ஆனால் நேற்றைய பூகம்பமானது நல்ல வேளையாக பெரும் சேதத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டு பூகம்பங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

2004ல் ஏற்பட்ட பூகம்பமும், நேற்று ஏற்பட்ட பூகம்பமும், சுமத்ராவின் மேற்குக் கடல் பகுதியில்தான் ஏற்பட்டன. அதாவது இரண்டுமே ஒரே பகுதியில்தான் ஏற்பட்டுள்ளன.

2004ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு முதலில் 8.9 ரி்க்டர் என கூறப்பட்டது. பின்னர் இது 9.1 ரிக்டராக திருத்தப்பட்டது. நேற்று ஏற்பட்ட பூகம்பமானது முதலில் 8.9 ஆக கூறப்பட்டது. பின்னர் இது 8.7 என குறைக்கப்பட்டது.

2004ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பமானது, கடலுக்கு அடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. நேற்றைய பூகம்பமானது 30 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இரண்டுக்கும் வித்தியாசம் வெறும் 3 கிலோமீட்டர் ஆழம்தான். ஆனால் இரண்டும் ஏற்படுத்திய விளைவுகள் மிகப் பெரியவை, மாறுபட்டவை.

2004ல் ஏற்பட்ட பூகம்பத்தால் பெரிய அளவில் சுனாமி பேரலைகள் எழுந்தன. இதனால் 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல லட்சம் பேர் வீடு, வாசல், உறவுகளை இழந்தனர்.

இந்த அளவுக்கு சேதம் ஏற்பட முக்கியக் காரணம், சுனாமிதான். 2004 பூகம்பத்தின்போது டெக்ட்ரானிக் பிளேட் எனப்படும் பாறைத் தட்டுக்கள் மேலும் கீழுமாக செங்குத்து திசையில் நகர்ந்ததே இந்த அபாயகரமான சுனாமிக்குக் காரணம். அதேசமயம், நேற்று ஏற்பட்ட பூகம்பத்தின்போது பாறைத் தட்டுக்கள் பக்கவாட்டில் நகர்ந்துள்ளன. இதனால்தான் பெரிதாக வந்த பூகம்பம் புஸ்வானமாகிப் போய் விட்டது.

Read More

பிரபாகரன் மீண்டும் வருவார், மீண்டு வருவார் - ஸ்ரீதரன்.
by admin - 0


முள்ளிவாய்க்கால்முழுவதும் பலஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று புதைத்துள்ளனர்.
இலங்கைக்கு வரும் இந்திய எம்.பிக்கள் குழு இங்கு சென்று பார்த்து ஆராய வேண்டும் என்று ஈழத் தமிழ் எம்.பி. ஸ்ரீதரன்
கூறியுள்ளார். மதுரையில் வக்கீல்கள் சங்கம், தமிழ் வக்கீல்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின்
சார்பில் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் கருத்தரங்கம்
ஒன்று நடந்தது. அதில் கலந்து கொண்டார் ஸ்ரீதரன். அப்போது அவர் பேசுகையில், இலங்கை தமிழர் விஷயத்தில் மனித
உரிமை மீறப்பட்டுள்ளது. ஏராளமானோர் காணாமல் போய் உள்ளனர். பள்ளி சென்ற குழந்தைகள் வீடு திரும்பவில்லை.பள்ளி சென்ற குழந்தைகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பெற்றோர் இல்லை. இதுபோன்று பல
கொடுமைகளை இலங்கை அரசு நடத்தி உள்ளது. இலங்கையில் தமிழர்கள் வசித்த பகுதியில் இருந்த சிவன் கோவிலை இடித்து விட்டு புத்தர்
கோவிலை கட்டி வருகிறார்கள். இலங்கை செட்டிகுளம் பகுதியில் 40 ஆயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் பகுதியில்
தமிழர்களை மீண்டும் குடி அமர்த்த இலங்கை அரசு மறுத்து வருகிறது.
கொல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் உடல்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கன்னி வெடி இருப்பதாக
கூறி குடியமர்த்த மறுத்து வருகிறார்கள்.ஆனால் அங்கு எதுவும் கிடையாது. இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு செல்ல
உள்ள குழு இலங்கை அரசு, சிங்கள ராணுவம் கூட்டி செல்லும் இடங்களுக்கு மட்டும் செல்லக்கூடாது.
கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால் பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். ஐ.நா தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்றும்
என்பது கேள்விக்குறியான விஷயம்தான். இலங்கை அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணையம் அளித்த பரிந்துரையைதான்
ஐ.நா தீர்மானமாக நிறைவேற்றி உள்ளது. இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும். தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளராணுவத்தினரை அப்புறப்படுத்த வேண்டும்.
இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். ஐ.நா தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருப்பதன் மூலம் இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் தெரிகிறது என்றார் அவர். விடுதலைப் புலிகள் பிரபாகரன் குறித்த
கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அவர் மீண்டும் வருவார், மீண்டு வருவார் என்றார்
ஸ்ரீதரன்.
Read More

April 11, 2012

மருந்துக்கு கட்டுப்படாத மலேரியா: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
by admin - 0

மலேரியா நோய்க் கிருமிகள் மருந்துக்கு அழியாமல் போகும் எதிர்ப்பு சக்தியைப் பெற்று வருகிறது என்றும், இதனால் அந்த நோய் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக உருவெடுத்துவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

இந்த வகையான நோய்க்கிருமிகள் முதலில் தென்பட்டிருந்த இடத்துக்கு 800 கிலோமீட்டர்கள் அப்பால் பர்மா தாய்லாந்து எல்லைப் பகுதியில் தற்போது காணப்படுவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேரியா நோயை முற்றுமாக ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் நடந்துவருகின்ற முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயம் இது என புதிய வலுவுடன் பரவ ஆரம்பித்துள்ள மலேரியா நோய்க் கிருமிகளை ஆராய்ந்து வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ சஞ்சிகையான தி லான்செட்டில் இவர்களது ஆராய்ச்சி பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2010 என்ற ஒரு வருடத்தில் மட்டுமே உலகெங்கும் பார்க்கையில் 6,55,000 பேர் உயிரிழக்க நேர்ந்திருந்தது. இதில் பெரும்பான்மையானோர் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் ஆவர்.

மலேரியா நோய்க் கிருமியானது கொசுக்கடி மூலம் பரவுகிறது.

இந்த கிருமிக்கு எதிராக பல காலமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் மருந்துக்கு கட்டுப்படாமல் போகிற ஒரு தன்மையை இக்கிருமிகளிடையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் முதல் தடவையாக கம்போடியாவில் விஞ்ஞானிகள் அவதானித்திருந்தனர்.

அவ்வகையான நோய்க்கிருமி மற்ற மற்ற இடங்களுக்கும் பரவாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனாலும் முதலில் காணப்பட்ட இடத்திலிருந்து 800 கிலோமீட்டருக்கு அப்பால் பர்மீய எல்லைப் பகுதியில் தற்போது இவ்வகை கிருமி காணப்படுகிறது.

ஏற்கனவே இந்தப் பகுதி அதிகம் பேருக்கு மலேரியா பரவுகின்ற ஒரு இடம் ஆகும்.

அர்டெமிஸினின் என்ற இரசாயனக் கலவையை அடிப்படையாகக் கொண்ட மருந்துகள் மலேரியா நோய்க் கிருமிகளை அழிக்க பயன்பட்டுவந்தன.

ஆனால், மலேரியா கிருமிகளில் தற்போது ஏற்பட்டுள்ள மரபணு மாற்றங்கள், அந்த மருந்துக்கும் அழியாமல் போகின்ற ஒரு வல்லமையை அக்கிருமிகளுக்குத் தந்துள்ளது.

இது பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரான்சுவா நோஸ்டன், மலேரியாவை ஒழிக்கும் நோக்கில் உலக அளவில் நடந்துவரும் முயற்சிகளுக்கு இது ஒரு பின்னடைவைத் தரலாம் என கூறினார்.

கொசுக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பரவுவதனால் மருந்துக்குக்கு கட்டுப்படாத நோய்க்கிருமி பரவுகிறதா அல்லது ஆங்காங்கே இருக்கும் நோய்க்கிருமிகளிலேயே மருந்துக்கு கட்டுப்படாத இந்த தன்மை உருவாகிறதா என்று இன்னும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அது எப்படியிருந்தாலும் இது நிச்சயம் கவலையளிக்ககூடிய ஒரு விஷயம்தான்.

இந்த மாதிரியான மலேரியா கிருமி இந்தியாவிலோ ஆப்பிரிக்காவிலோ தென்பட ஆரம்பித்தால், அரசாங்கங்கள், உதவியமைப்புகள் போன்றவை என்னதான் முயன்றாலும் மலேரியாவை முற்றுமாக ஒழிப்பதென்பது இயலாத காரியமாகிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.


-பி.பி.சி.


Read More

வாழ்க்கையில் முதல் முறையாக விளம்பரங்களில் நடிக்கும் கமல்
by admin - 0

தனது 50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக விளம்பரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் கமல்ஹாஸன்.

நடிகர், நடிகைகள் பலர் நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளில் விளம்பர படங்களில் நடித்து பெரும் வருவாய் பார்த்து வருகின்றனர். ஆனால் தமிழ் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் கமலஹாசன் மட்டும் எந்த விளம்பர படங்களையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தனர்.

தாங்கள் இத்தகைய விளம்பரங்களில் நடிப்பதால், ரசிகர்களை தவறாக திசை திருப்பவது போலாகிவிடும் என்ற காரணத்தால் இத்தகைய முடிவை மேற்கொண்டிருந்தனர்.

கமல் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு விளம்பர படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். 50 ஆண்டுகளாக கமல் சினிமாவில் இருக்கிறார். இதுவரை அவர் விளம்பரங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதல் தடவையாக விளம்பர படங்களில் நடிக்க மும்பை நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த நிறுவனம் மூலம் எற்கனவே இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான, கரீனாகபூர், பிரியங்கா சோப்ரா போன்றோர் விளம்பர படங்களில் நடித்துள்ளனர்.

சினிமா வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த முயற்சியில் இறங்குவதாக கமல் தெரிவித்துள்ளார். சமூக சேவையில் அக்கறையுள்ள விளம்பர படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

அல்லயன்ஸ் மீடியா என்ற நிறுவனம்தான் கமலை வைத்து விளம்பரங்களை எடுக்கப் போகிறது. இந்த நிறுவனம்தான் அமிதாப், ஷாரூக், சாயிப் அலிகான், கரீனா என பல பிரபலங்களையும் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

மீண்டும் ஒரு மன்மதன்! கதை எழுதுகிறார் சிம்பு!
by admin - 0


நடிகர் சிம்பு வேட்டை மன்னன், போடா போடி ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார். படத்தில் பிஸியாக இருந்தாலும் ஒரு வருடத்தில் திருமணம்செய்துகொள்ளப் போகிறேன் என அறிவித்த சிம்பு, திருமண அறிவிப்பை தொடர்ந்து நடிகை நயன்தாராவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்னர் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் அவர்களுக்கிடையே ஏற்பட்ட காதல், கசப்பு ஆகியவற்றிற்குப் பிறகு இருவரின் நடிப்பு எப்படி இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடையே பரவியுள்ளது(ஏன்னா வல்லவன் படத்துல அந்த மாதிரி நடிப்பு). நயன்தாரா புதுப்படங்களில் நடிக்க கதை கேட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நடிகர் சிம்பு அதிகாலை 6 மணிக்கு எழுந்து கதை எழுத ஆரம்பித்துவிட்டார்.


இதற்கு முன் சிம்பு கதை எழுதி இயக்கிய படம் மன்மதன். சிம்புவின் முதல் காதல் கதையைத் தான் மன்மதன் படமாக எடுத்தார் என்றும் பேசப்பட்டது. அடுத்ததாக நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் முறிவிற்குப் பிறகு மறுபடியும் என் காதல் கதையை படமாக எடுக்கப் போகிறேன் எனக் கூறியிருந்தார்.

பிறகு அதை பற்றி எதுவும் பேசாமல் தனது வேலைகளில் கவனாக இருந்த சிம்பு இப்போது கதை எழுதுவது பற்றி “ ஒரு கதை எழுத ஆரம்பித்துவிட்டேன். அது என்னை முழுவதும் கவர்ந்துவிட்டது. இன்னும் நிறைய நடக்கிறது. அதை பற்றி பிறகு கூறுகிறேன்” என்று ட்விட்டரில் எழுதியிருக்கிறார். சிம்புவுடன் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்க, தன் காதல் கதையையே சிம்பு எழுதிக் கொண்டிருக்கிறார்.

சிம்புவுடன் நடிக்க ஒப்புக் கொண்டால் சிம்பு எழுதும் கதையில்(தனது கதாபாத்திரத்திலேயே) நயன்தாரா நடிப்பாரா?


Read More

இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மீண்டும் வாபஸ்- இருந்தாலும் கண்காணிப்பு நீடிப்பு!
by admin - 0

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் சுனாமி அலைகள் எழாததால், இதற்கான வாய்ப்பு குறைந்ததாக கருதப்பட்டது. ஆனால் இந்தோனேசியாவில் அடுத்தடுத்து 2 முறை 8.5 ரிக்டர் அளவிலான ஆப்டர்ஷாக் எனப்படும் பின் அதிர்வு ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கை இந்தோனேசியாவில் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

முன்னதாக முதலில் புதுவையில் 4.30மணிக்கும், சென்னையில் 5 மணிக்கும் சுனாமி தாக்கலாம் என கூறப்பட்டிருந்தது. பின்னர் இது புதுவையில் 6.30 மணி வரையிலும், சென்னையில் இரவு 7 மணி வரையிலும் எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்த எச்சரிக்கை முறைப்படி திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து இந்தியாவில் சென்னை, விசாகப்பட்டினம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தமிழ்நாட்டின் முக்கிய கடற்கரை நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தோனேசியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

சென்னையை மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கும் என்று கூறப்பட்டதால், கடற்கரையோரங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதனால் கடற்கரை காமராஜர் சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது. கரையோரம் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வந்தனர்.

அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின

நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னையின் கடலோரப் பகுதிகளில் உள்ள அரசு அலுவலங்கள் அனைத்திலிருந்தும் ஊழியர்கள் வெளியேறினனர். அனைவரும் முன்னெச்சரிக்கை காரணமாக வீடுகளுக்குக் கிளம்பிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதால் அனைத்து ஊழியர்களும் கிளம்பி விட்டனர்.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி தாக்குதலினாலும் சென்னையில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

இந்தோனேசியாவில் 2004 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 7.2 ரிக்டர் அளவுதான். அதற்கே அந்தமான், இலங்கை, தமிழ்நாட்டின் கடற்கரையோர லட்சக்கணக்கானோர் மக்கள் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் பொருளிழப்பு ஏற்பட்டது. கடலூர், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன.

தற்போது 8.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமாக இருப்பதால், சுனாமியின் வேகம் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்பட்டதால் மக்கள் பெரும் பீதியுடன் இருந்தனர்.

இந்த நிலையில் சுனாமி தாக்க வாய்ப்பில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

ஆனால் தற்போது இந்தோனேசியாவில் அடுத்தடுத்து 2 முறை சக்தி வாய்ந்த ஆப்டர்ஷாக் ஏற்பட்டது. முதலில் 8.3 ரிக்டராகவும், பின்னர் 8.5 ரிக்டர் அளவிலும் இது பதிவானது. இதையடுத்து 2 மணி நேரம் சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் நீட்டித்தது.

இதையடுத்து இந்தியாவிலும் சுனாமி எச்சரிக்கை தள்ளிப் போனது. அதன்படி மாலை 6.30 மணி வரை புதுச்சேரிக்கும், இரவு 7 மணி வரை சென்னைக்கும் சுனாமி எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டது.

சுனாமி எச்சரிக்கை வாபஸ்

இந்த நிலையில் பூகம்பம் தாக்கி 4 மணி நேரங்கள் கடந்து விட்டதால் தற்போது சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தமானில் 3.9 மீட்டர் உயர அலைகள் தாக்கலாம்

முன்னதாக அந்தமான் கடலோரத்தை 3.9 ரிக்டர் அளவிலான சுனாமி அலைகள் தாக்கலாம் என்று எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிமிடம் வரை எந்தத் தாக்குதலும் ஏற்படவில்லை.
Read More

இலங்கை சுனாமி எச்சரிக்கை விலக்கிக்கொள்ள பட்டது
by admin - 0

இலங்கை கரையோர பகுதிகளுக்கு விடுக்க பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை விலக்கிக்கொள்ள பட்டது காலநிலை மையம்
Read More

யாழில் மாநகரசபை சுனாமி எச்சரிக்கை
by admin - 0

யாழில் மாநகரசபை சுனாமி எச்சரிக்கை எச்சரிக்கை செயற்ப்பட்டை முன்னெடுத்துள்ளது ஒலிபெருக்கி மூலம் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மீனவர்களை மீன் பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தலை ஒலிபெருக்கிமூலம் அறிவுறுத்தி வருகின்றது
Read More

யாழ்.பல்கலையில் கனிஸ்ட மாணவனை பகிடிவதைக்கு உள்ளாக்கிய சிரேஸ்ட மாணவர்கள் மூவர் இடைநீக்கம்
by admin - 0

யாழ்.பல்கலைக்கழக கனிஸ்ட மாணவனை பகிடிவதைக்கு உள்ளாக்கிய சிரேஸ்ட மாணவர்கள் மூவரை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் மற்றும் வகுப்புத்தடை விதித்து இடைநிறுத்தியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 28 ஆம் திகதி யாழ்ப்ப்பாண பல்கலைக்கழக முதலாம் வருட கலைப்பீட மாணவனான தில்லைநாதன் தனராஜ் (வயது 22) என்ற மாணவன் சிரேஸ்ட மாணவர்களினால் பகிடிவதை செய்யப்பட்டு தாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களை இடைநிறுத்தியுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.
Read More

கிழக்கு, தெற்கு பாதிக்கப்படலாம்?
by admin - 0

சுனாமித்தாக்கம் ஏற்படுமாயின் கிழக்கு மற்றும் தெற்கு கரையோரப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.





Read More

கரையோரங்களில் வாழும் உங்கள் நண்பர்களுக்கு உடன் அறிவியுங்கள்
by admin - 0



கரையோரங்களில் வாழும் உங்கள் நண்பர்களுக்கு உடன் அறிவியுங்கள். இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே அசே பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது. பசிபிக் கடலில் நிலத்துக்கடியில் 30 கி.மீ. ...ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 8.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இது மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும். இதையடுத்து அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேஷியாவில் இதே பகுதியில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான மிக பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தமிழகம், இலங்கை உள்பட உலகம் முழுவதும் 2.3 லட்சம் பேரை பலி கொண்டது நினைவுகூறத்தக்கது. இப்போதும் இந்த நிலநடுக்கத்தால் வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள 28 நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது






Read More

மீண்டு சுமதிரா திவுக்கருகில் 8.6 அளவில் பூமியதிர் உணரப்பட்டது
by admin - 0

மீண்டு சுமதிரா திவுக்கருகில் 8.6 அளவில் பூமியதிர் உணரப்பட்டது



Read More

இலங்கையில் மாலை 6 மணிக்கு மேல் சுனாமி வரும்
by admin - 0

இலங்கையில் சற்று முன்னர்
இன்று பிற்பகல் 2.20
மணியளவில் சிறியவான பூமியதிர்வு ஏற்பட்டதை உணர முடிந்தது.
கொழும்பில் 30 செக்கன்
வரை இவ்வதிர்வை உணரமுடிந்தது என மக்கள்
தெரிவித்துள்ளனர். எனினும் இந்த அதிர்வானது 2004 இல்
சுனாமி ஏற்படுவதற்கு முன்பு ஏற்பட்ட
பூமியதிர்வைப் போன்று இருந்ததாக மக்கள்
அச்சம் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நில
நடுக்கம் உணரப்பட்டதாக தெரியப்படுகிறது. இலங்கையில் நிலநடுக்கம் உணரப்பட்ட
இடங்களும் நேரங்களும் ரிக்டர் அளவுகளும்
வருமாறு: தேவேந்திர முனை முற்பகல் 10. 39 ரிக்டர்
5.9 திருகோணமலை முற்பகல் 10.51 ரிக்டர் 8.7 கொழும்பு முற்பகல் 11.20 ரிக்டர் 6.9 யாழ்ப்பாணம் பிற்பகல் 12.31 ரிக்டர் 9.9 தலைநகரம் கொழும்பில் இவ்வாறான
ஒரு உணர்வு ஏற்பட்டதாகவும், தொடர்
மாடிகளில் உள்ளோர் மற்றும் அனைவரும்
பீதியில் வெளியே ஓடிச் சென்றதாகவும்
தற்சமயம் நடுக்கம் அற்றுப் போய்
உள்ளதாகவும் அறிய முடிகிறது. யாழ்ப்பாணத்தில் பெரிய கட்டிடங்களில் இந்நில
நடுக்கத்தினை நன்கு உணரமுடிந்ததாகவும்,
வீரசிங்கம் மண்டபம், யாழ் பொதுநூலகம்
போன்ற கட்டிடங்களில் இருந்தோர் பீதியில்
வெளியில் ஓடிவந்தனர் எனவும் மக்கள்
தெரிவித்துள்ளனர். இதேவேளை யாழ் கரையோர
மக்களை பாதுகாப்பான
இடங்களுக்கு செல்லுமாறு யாழ்.பொது அமை
சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழில் சித்திரைப் புத்தாண்டு குதூகலத்தில்
இருக்கும் மக்கள் இந்நில நடுக்கத்தினால்
அச்சத்தில் உள்ளனர். இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில
நடுக்கத்தினை அடுத்து,
இந்தியா இலங்கை போன்ற நாடுகளில்
இந்நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், சென்னை மாவட்டத்தில் பல
இடங்களில் இந்நில
நடுக்கத்தினை உணர்ந்ததால்
அனைத்து கம்பனிகள், நீதிமன்றங்கள்,
அலுவலகங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை உட்பட 28
நாடுகளுக்கு இச்சுனாமி எச்சரிக்கை விடுக்க 2006இல் இந்தோனேசியாவில்
சுமத்திரா தீவில் ஏற்பட்ட அதிர்வு போன்றே,
அதே இடத்தில் மீண்டும் இன்று 8.7 ரிக்டர்
அளவில்
அதிர்வு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியா, இந்தியாவில் பல சேதங்கள்
ஏற்பட்டதாகவும், இலங்கையில் மாலை 6
மணிக்கு மேல் சுனாமி வரும் எனவும்
இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இலங்கையில்
கரையோரப்பகுதிகளில் மக்களின்
பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம்
நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார
சபை அறிவித்துள்ளது. குறிப்பாக
தெற்கு கிழக்கு வடக்கு பகுதிகளில்
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்த
பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்தும்
நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வேத் திணைக்களம்
தெரிவித்துள்ளது. கரையோரப்பகுதிகளில் உள்ள
மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச்
செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை,
மீனவர்கள் தொழிலுக்குச்
செல்லவேண்டாமெனவும்
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளthu 000
WEIO21 PHEB 111054
TSUIOX

TSUNAMI BULLETIN NUMBER 004
PACIFIC TSUNAMI WARNING CENTER/NOAA/NWS
ISSUED AT 1054Z 11 APR 2012

THIS BULLETIN IS FOR ALL AREAS OF THE INDIAN OCEAN.

... AN INDIAN-OCEAN-WIDE TSUNAMI WATCH IS IN EFFECT ...

... A MAJOR AFTERSHOCK OCCURRED AT 11:43Z WITH MAGNITUDE 8.3 ...

A TSUNAMI WATCH IS STILL IN EFFECT FOR

INDONESIA / INDIA / AUSTRALIA / SRI LANKA / MYANMAR / THAILAND /
MALDIVES / UNITED KINGDOM / MALAYSIA / MAURITIUS / REUNION /
SEYCHELLES / OMAN / PAKISTAN / SOMALIA / MADAGASCAR / IRAN /
UAE / YEMEN / COMORES / MOZAMBIQUE / KENYA / TANZANIA /
CROZET ISLANDS / BANGLADESH / KERGUELEN ISLANDS / SOUTH AFRICA /
SINGAPORE

THIS BULLETIN IS ISSUED AS ADVICE TO GOVERNMENT AGENCIES. ONLY
NATIONAL AND LOCAL GOVERNMENT AGENCIES HAVE THE AUTHORITY TO MAKE
DECISIONS REGARDING THE OFFICIAL STATE OF ALERT IN THEIR AREA AND
ANY ACTIONS TO BE TAKEN IN RESPONSE.

AN EARTHQUAKE HAS OCCURRED WITH THESE PRELIMINARY PARAMETERS

ORIGIN TIME - 0839Z 11 APR 2012
COORDINATES - 2.3 NORTH 93.1 EAST
LOCATION - OFF W COAST OF NORTHERN SUMATRA
MAGNITUDE - 8.7

MEASUREMENTS OR REPORTS OF TSUNAMI WAVE ACTIVITY

GAUGE LOCATION LAT LON TIME AMPL PER
------------------- ----- ------ ----- --------------- -----
TELUKDALAM ID 0.6N 97.8E 0952Z 0.15M / 0.5FT 08MIN
SABANG ID 5.8N 95.3E 1010Z 0.36M / 1.2FT 06MIN
MEULABOH ID 4.1N 96.1E 1007Z 1.06M / 3.5FT 12MIN
DART 23401 8.9N 88.5E 0956Z 0.03M / 0.1FT 06MIN
SABANG ID 5.8N 95.3E 0956Z 0.31M / 1.0FT 08MIN

LAT - LATITUDE (N-NORTH, S-SOUTH)
LON - LONGITUDE (E-EAST, W-WEST)
TIME - TIME OF THE MEASUREMENT (Z IS UTC IS GREENWICH TIME)
AMPL - TSUNAMI AMPLITUDE MEASURED RELATIVE TO NORMAL SEA LEVEL.
IT IS ...NOT... CREST-TO-TROUGH WAVE HEIGHT.
VALUES ARE GIVEN IN BOTH METERS(M) AND FEET(FT).
PER - PERIOD OF TIME IN MINUTES(MIN) FROM ONE WAVE TO THE NEXT.

NOTE - DART MEASUREMENTS ARE FROM THE DEEP OCEAN AND THEY
ARE GENERALLY MUCH SMALLER THAN WOULD BE COASTAL
MEASUREMENTS AT SIMILAR LOCATIONS.

EVALUATION

SEA LEVEL READINGS INDICATE A TSUNAMI WAS GENERATED. IT MAY
ALREADY HAVE BEEN DESTRUCTIVE ALONG SOME COASTS.

BASED ON THESE DATA THE THREAT CONTINUES FOR ALL COASTAL AREAS OF
THE INDIAN OCEAN. FOR THOSE AREAS - WHEN NO MAJOR WAVES HAVE
OCCURRED FOR AT LEAST TWO HOURS AFTER THE ESTIMATED ARRIVAL TIME
OR DAMAGING WAVES HAVE NOT OCCURRED FOR AT LEAST TWO HOURS THEN
LOCAL AUTHORITIES CAN ASSUME THE THREAT IS PASSED. DANGER TO
BOATS AND COASTAL STRUCTURES CAN CONTINUE FOR SEVERAL HOURS DUE
TO RAPID CURRENTS. AS LOCAL CONDITIONS CAN CAUSE A WIDE
VARIATION IN TSUNAMI WAVE ACTION THE ALL CLEAR DETERMINATION MUST
BE MADE BY LOCAL AUTHORITIES.

ESTIMATED INITIAL TSUNAMI WAVE ARRIVAL TIMES AT FORECAST POINTS
WITHIN THE WARNING AND WATCH AREAS ARE GIVEN BELOW. ACTUAL
ARRIVAL TIMES MAY DIFFER AND THE INITIAL WAVE MAY NOT BE THE
LARGEST. A TSUNAMI IS A SERIES OF WAVES AND THE TIME BETWEEN
SUCCESSIVE WAVES CAN BE FIVE MINUTES TO ONE HOUR.

LOCATION FORECAST POINT COORDINATES ARRIVAL TIME
-------------------------------- ------------ ------------
INDONESIA SIMEULUE 2.5N 96.0E 0912Z 11 APR
BANDA_ACEH 5.5N 95.1E 0933Z 11 APR
SIBERUT 1.5S 98.7E 0944Z 11 APR
PADANG 0.9S 100.1E 1025Z 11 APR
BENGKULU 3.9S 102.0E 1037Z 11 APR
CILACAP 7.8S 108.9E 1150Z 11 APR
BANDAR_LAMPUNG 5.7S 105.3E 1200Z 11 APR
BALI 8.7S 115.3E 1234Z 11 APR
BELAWAN 3.8N 98.8E 1326Z 11 APR
KUPANG 10.0S 123.4E 1333Z 11 APR
BALI 8.7S 115.3E 1234Z 11 APR
INDIA GREAT_NICOBAR 7.1N 93.6E 0937Z 11 APR
LITTLE_ANDAMAN 10.7N 92.3E 1015Z 11 APR
NORTH_ANDAMAN 13.3N 92.6E 1045Z 11 APR
PORT_BLAIR 11.9N 92.7E 1050Z 11 APR
CHENNAI 13.4N 80.4E 1134Z 11 APR
TRIVANDRUM 8.3N 76.9E 1204Z 11 APR
KAKINADA 17.2N 82.7E 1204Z 11 APR
MANGALORE 13.3N 74.4E 1339Z 11 APR
BOMBAY 18.8N 72.6E 1605Z 11 APR
GULF_OF_KUTCH 22.7N 68.9E 1636Z 11 APR
AUSTRALIA COCOS_ISLAND 12.1S 96.7E 1046Z 11 APR
NORTH_WEST_CAPE 21.5S 113.9E 1312Z 11 APR
CAPE_INSPIRATIO 25.9S 113.0E 1413Z 11 APR
PERTH 32.0S 115.3E 1421Z 11 APR
AUGUSTA 34.3S 114.7E 1440Z 11 APR
GERALDTOWN 28.6S 114.3E 1456Z 11 APR
CAPE_LEVEQUE 16.1S 122.6E 1500Z 11 APR
ESPERANCE 34.0S 121.8E 1614Z 11 APR
KINGSTON_SOUTH_ 37.0S 139.4E 1747Z 11 APR
HEARD_ISLAND 54.0S 73.5E 1803Z 11 APR
EUCLA_MOTEL 31.8S 128.9E 1824Z 11 APR
HOBART 43.3S 147.6E 1858Z 11 APR
DARWIN 12.1S 130.7E 1921Z 11 APR
SRI LANKA TRINCOMALEE 8.7N 81.3E 1049Z 11 APR
DONDRA_HEAD 5.9N 80.6E 1054Z 11 APR
COLOMBO 6.9N 79.8E 1121Z 11 APR
JAFFNA 9.9N 80.0E 1235Z 11 APR
MYANMAR CHEDUBA_ISLAND 18.9N 93.4E 1142Z 11 APR
CHEDUBA_ISLAND 18.9N 93.4E 1142Z 11 APR
PYINKAYAING 15.9N 94.3E 1152Z 11 APR
SITTWE 20.0N 92.9E 1220Z 11 APR
MERGUI 12.8N 98.4E 1328Z 11 APR
YANGON 16.5N 96.4E 1720Z 11 APR
THAILAND PHUKET 8.0N 98.2E 1113Z 11 APR
KO_PHRA_THONG 9.1N 98.2E 1203Z 11 APR
KO_TARUTAO 6.6N 99.6E 1233Z 11 APR
MALDIVES GAN 0.6S 73.2E 1144Z 11 APR
MALE 4.2N 73.6E 1149Z 11 APR
MINICOV 8.3N 73.0E 1214Z 11 APR
UNITED KINGDOM DIEGO_GARCIA 7.3S 72.4E 1202Z 11 APR
MALAYSIA GEORGETOWN 5.4N 100.1E 1303Z 11 APR
PORT_DICKSON 2.5N 101.7E 1743Z 11 APR
MAURITIUS PORT_LOUIS 20.0S 57.3E 1500Z 11 APR
REUNION ST_DENIS 20.8S 55.2E 1514Z 11 APR
SEYCHELLES VICTORIA 4.5S 55.6E 1525Z 11 APR
OMAN SALALAH 16.9N 54.1E 1537Z 11 APR
MUSCAT 23.9N 58.6E 1544Z 11 APR
DUQM 19.7N 57.8E 1553Z 11 APR
PAKISTAN GWADAR 25.1N 62.4E 1546Z 11 APR
KARACHI 24.7N 66.9E 1638Z 11 APR
SOMALIA HILALAYA 6.4N 49.1E 1546Z 11 APR
CAPE_GUARO 11.9N 51.4E 1547Z 11 APR
MOGADISHU 2.0N 45.5E 1602Z 11 APR
KAAMBOONI 1.5S 41.9E 1629Z 11 APR
MADAGASCAR ANTSIRANANA 12.1S 49.5E 1548Z 11 APR
TOAMASINA 17.8S 49.6E 1601Z 11 APR
MANAKARA 22.2S 48.2E 1616Z 11 APR
MAHAJANGA 15.4S 46.2E 1652Z 11 APR
CAP_STE_MARIE 25.8S 45.2E 1716Z 11 APR
TOLIARA 23.4S 43.6E 1741Z 11 APR
IRAN GAVATER 25.0N 61.3E 1552Z 11 APR
UAE FUJAIRAH 25.1N 56.4E 1630Z 11 APR
YEMEN AL_MUKALLA 14.5N 49.2E 1637Z 11 APR
ADEN 13.0N 45.2E 1722Z 11 APR
COMORES MORONI 11.6S 43.3E 1649Z 11 APR
MOZAMBIQUE CABO_DELGADO 10.7S 40.7E 1706Z 11 APR
ANGOCHE 15.5S 40.6E 1738Z 11 APR
QUELIMANE 18.0S 37.1E 1905Z 11 APR
MAPUTO 25.9S 32.8E 1955Z 11 APR
BEIRA 19.9S 35.1E 2017Z 11 APR
KENYA MOMBASA 4.0S 39.7E 1706Z 11 APR
TANZANIA LINDI 9.8S 39.9E 1707Z 11 APR
DAR_ES_SALAAM 6.7S 39.4E 1710Z 11 APR
CROZET ISLANDS CROZET_ISLANDS 46.4S 51.8E 1734Z 11 APR
BANGLADESH CHITTAGONG 22.7N 91.2E 1735Z 11 APR
KERGUELEN ISLAN PORT_AUX_FRANCA 49.0S 69.1E 1816Z 11 APR
SOUTH AFRICA PRINCE_EDWARD_I 46.6S 37.6E 1907Z 11 APR
DURBAN 29.8S 31.2E 1910Z 11 APR
PORT_ELIZABETH 33.9S 25.8E 2011Z 11 APR
CAPE_TOWN 34.1S 18.0E 2111Z 11 APR
SINGAPORE SINGAPORE 1.2N 103.8E 2330Z 11 APR

ADDITIONAL BULLETINS WILL BE ISSUED BY THE PACIFIC TSUNAMI
WARNING CENTER FOR THIS EVENT AS MORE INFORMATION
BECOMES AVAILABLE.

THE JAPAN METEOROLOGICAL AGENCY MAY ISSUE ADDITIONAL INFORMATION
FOR THIS EVENT. IN THE CASE OF CONFLICTING INFORMATION...THE
MORE CONSERVATIVE INFORMATION SHOULD BE USED FOR SAFETY.
Read More