வணக்கம் வருக தமிழுக்கு முதல் இடம்
Headlines News :
விவசாயி இணையத்தை like(விருப்பம் ) செய்து விட்டு வெளியேறுங்கள் ...
Home » » மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம்

மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம்

தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடத்தீர்மானித்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை 4 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு, சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரும்படி கடந்த ஆறு மாதங்களாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை வலியுறுத்திய போதும் இதுவரை எதுவித பலனும் கிடைக்கவில்லையென்று மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


அதேவேளை, இதற்கு முன்னரும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 உங்கள் கருத்துகள் இங்கே .........:

அதிகம் வாசிக்கப்பட்டவை

 
Support : Creating Website | vivasaayi | Mas Template
Proudly powered by vivasaayi
Copyright © 2011. விவசாயி-Tamil News - All Rights Reserved
Template Design by well come Published by vivasaayi