வணக்கம் வருக தமிழுக்கு முதல் இடம்
Headlines News :
விவசாயி இணையத்தை like(விருப்பம் ) செய்து விட்டு வெளியேறுங்கள் ...
Home » » காக்க வைத்த அஜீத்! கை கொடுத்த சூர்யா!

காக்க வைத்த அஜீத்! கை கொடுத்த சூர்யா!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிப்பதாக இருந்த ‘துப்பறியும் ஆனந்தன்’ படத்தில் சூர்யா நடிக்கிறார். ‘துப்பறியும் ஆனந்தன்’ படத்தின் கதை இரண்டு வருடங்களுக்கு முன்னரே கௌதம் மேனனால் எழுதப்பட்டது. அந்தக் கதையில் அஜீத் நடிப்பார் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது.

அஜீத்திடம் இந்தக் கதையை சொன்ன கௌதம் மேனன், அவர் நிச்சயம் சம்மதிப்பார் என எதிர்ப்பார்த்தார். ஆனால் அஜீத் எந்த பதிலும் சொல்லவில்லை. பொருமை இழந்த கௌதம் மேனன், அஜீத்துக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு சூர்யா இருக்கிறார்! என்று பேட்டி அளித்தார்.





பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. துப்பறியும் ஆனந்தன் கதையில் தான் விஜய் நடிக்கிறார் என்று நினைத்த நேரத்தில், அது வேறு கதை, இது வேறு கதை என்று சொன்னார் கௌதம் மேனன்.

இப்போது மீண்டும் துப்பறியும் ஆனந்த் கதையை கையில் எடுத்திருக்கிறார் கௌதம். அதில் சூர்யா நடிக்கிறார் என்று உறுதியான தகவலை வெளியிட்டிருக்கிறார். இளையராஜா இசையமைத்து கௌதம் மேனன் இயக்கும் நீதானே என் பொன்வசந்தம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.



அதன் பிறகு விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கௌதம் மேனன். விஜய் நடிக்கும் யோஹன் அத்தியாயம்-1 படத்தை முடித்த பின், துப்பறியும் ஆனந்த் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் 2013ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதைப்பற்றி பேட்டியளித்த சூர்யா, கௌதம் மேனனும் நானும் சேர்ந்தாலே எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கும். அதே போல இந்தப் படத்திலும் காதல், அதிரடிக் காட்சிகள், அபாரமான பாடல்கள் என எல்லாமே இருக்கும், என்றார்.

கௌதம் மேனன் பேசும் போது, இந்தப் படத்தில் சூர்யா நடிக்க முன் வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இது ஒரு அதிரடியான படம் தான், அதே சமயம் சரித்திர கால படத்தின் சாயலும் இதில் இருக்கும் என்றார்.

இதற்கு முன்பு அஜீத் நடிக்க வேண்டிய நேருக்கு நேர், கஜினி போன்ற படங்களில் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் சூர்யாவுக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்தாலும், அஜீத்துக்கான மாஸ் இன்னும் அப்படியே இருக்கிறது என்பதற்கு அவர் ரசிகர்கள் சாட்சி!


Share this article :

0 உங்கள் கருத்துகள் இங்கே .........:

அதிகம் வாசிக்கப்பட்டவை

 
Support : Creating Website | vivasaayi | Mas Template
Proudly powered by vivasaayi
Copyright © 2011. விவசாயி-Tamil News - All Rights Reserved
Template Design by well come Published by vivasaayi