வணக்கம் வருக தமிழுக்கு முதல் இடம்
Headlines News :
விவசாயி இணையத்தை like(விருப்பம் ) செய்து விட்டு வெளியேறுங்கள் ...
Home » » காதலனை விரைவில் அறிவிப்பேன்-நடிகை த்ரிஷா

காதலனை விரைவில் அறிவிப்பேன்-நடிகை த்ரிஷா


தமிழ், இந்தி, தெலுங்கு என பிஸியாக நடித்துக்கொண்டிருந்த த்ரிஷா சமீபகாலமாக படங்களை குறைத்துக்கொண்டார். தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிக்கிறார். இந்நிலையில் அவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்துவருகிறார்கள்.

யார் மாப்பிள்ளை என்பதை விரைவில் அறிவிக்க உள்ளனர். தற்போது பொள்ளாச்சியில் நடக்கும் ‘தம்மு’ என்ற தெலுங்கு பட ஷூட்டிங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்து வருகிறார்.


ஷூட்டிங்கில் த்ரிஷா அளித்த பேட்டியில்,“நடிகைகள் நட்பாக இருக்க முடியும். நான் மிகவும் பாசமாக இருப்பவள். சிலருடன்தான் நட்பாக பழகுகிறேன். நட்பு என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி போன்றது. இதனால் எப்போதுமே அளவுடன் பழகுவேன்.



என்னைப்பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. சில நேரம் அதைக்கண்டு சிரிப்புதான் வரும். தெலுங்கு நடிகர் ராணாவுடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது.

என்னுடைய திருமணத்துக்கு ரொம்பநாள் இல்லை. என் காதலனை விரைவில் அறிவிப்பேன்.

உண்மையாக இருப்பதில்தான் எனக்கு நம்பிக்கை அதிகம். நடிப்பை பொறுத்தவரையில் 2 அல்லது 3 பெரிய ஹீரோக்களுடன் நடித்து வருகிறேன்.

எத்தனை நாட்கள்தான் இந்த ஜோடியையே ரசித்துக்கொண்டிருப்பார்கள்.

எனவே புதுமுகங்களுக்கு வழிவிடுகிறேன். நான் மகிழ்ச்சியாக, நிறைவான மனதுடன் இருக்கிறேன். என் வாழ்வில் நடந்த எல்லா நல்ல காரியங்களுக்கும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்” என்றார்.realptr.comrealptr.com
Share this article :

0 உங்கள் கருத்துகள் இங்கே .........:

Join Us On Facebook

Please Wait 10 Seconds...!!!Skip

அதிகம் வாசிக்கப்பட்டவை

 
Support : Creating Website | vivasaayi | Mas Template
Proudly powered by vivasaayi
Copyright © 2011. விவசாயி-Tamil News - All Rights Reserved
Template Design by well come Published by vivasaayi