வணக்கம் வருக தமிழுக்கு முதல் இடம்
Headlines News :
விவசாயி இணையத்தை like(விருப்பம் ) செய்து விட்டு வெளியேறுங்கள் ...
Home » » எலிசபெத் மகாராணியின் கைப்பையில் என்ன இருக்கு?

எலிசபெத் மகாராணியின் கைப்பையில் என்ன இருக்கு?


இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கைப்பையில் என்னவெல்லாம் இருக்கிறது என்ற ரகசியம் வெளியாகியுள்ளது.

பெண்களின் கைப்பையில் என்ன இருக்கிறது என்பதை அறிய ஆண்கள் அதீத ஆர்வம் காட்டுவது வழக்கம்தான். அதிலும் பிரபலமான பெண்மணிகள் என்றால் அதில் என்னதான் இருக்கும் என்று மண்டயையைப் பிய்த்துக் கொள்வார்கள்.

இப்போது இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கைப்பை ரகசியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எலிசபெத், என்ன நிறத்தில் உடை அணிகிறாரோ அதே நிறத்தில் தொப்பி அணிந்து, கைப்பை வைத்திருப்பார். ராணி எங்கு சென்றாலும் கைப்பை இல்லாமல் செல்லமாட்டார். அப்படி அதில் என்ன தான் இருக்கிறது என்று பல ஆண்டுகளாக மக்கள் குழம்பியதுண்டு. அந்த குழப்பத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

எலிசபெத் தி குயின்: தி உமன் பிஹைன்ட் தி திரோன் என்ற புத்தகத்தில் சாலி பெடல் ஸ்மித் ராணியின் கைப்பையில் உள்ள பொருட்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

லிப்ஸ்டிக், சின்ன கண்ணாடி, மடிக்கப்பட்ட 5 அல்லது 10 பவுண்டு நோட்டு ஆகியவை அதில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த நோட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலய உண்டியலில் போடுவதற்காம்.

இது குறித்து ஸ்மித் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது,

ராணி எலிசபெத்தின் கைப்பையில் மூக்கு கண்ணாடி, பேனா, மின்ட் மிட்டாய், தேவாலயத்தில் போடுவதற்காக பவுண்டு நோட்டு, எங்காவது சென்றால் அங்குள்ள டேபிளுக்கு அடியில் கைப்பையை தொங்கவிட ஊக்கு ஆகியவற்றை வைத்திருப்பார் என்றார்.

எலிசபெத்தின் கைப்பையில் என்ன இருக்கிறது என்பதை ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டு வாட்ஸ் இஸ் இன் தி குயின்ஸ் ஹேன்ட்பேக்: அன்ட் அதர் ராயல் சீக்ரட்ஸ் என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 உங்கள் கருத்துகள் இங்கே .........:

Join Us On Facebook

Please Wait 10 Seconds...!!!Skip

அதிகம் வாசிக்கப்பட்டவை

 
Support : Creating Website | vivasaayi | Mas Template
Proudly powered by vivasaayi
Copyright © 2011. விவசாயி-Tamil News - All Rights Reserved
Template Design by well come Published by vivasaayi