வணக்கம் வருக தமிழுக்கு முதல் இடம்
Headlines News :
விவசாயி இணையத்தை like(விருப்பம் ) செய்து விட்டு வெளியேறுங்கள் ...
Home » » சாரு நிவேதிதா ரஜினியை சாடியிருப்பது ரஜினி ரசிகர்களை கடும் கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

சாரு நிவேதிதா ரஜினியை சாடியிருப்பது ரஜினி ரசிகர்களை கடும் கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

சென்னை: சினிமா நடிகர்களை வைத்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் போக்கு அதிகரித்து விட்டதாக தேவையில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சாடியுள்ளார் சர்ச்சை எழுத்தாளரான சாரு நிவேதிதா.

தன் எழுத்தின் பால் ஈர்க்கப்பட்டு சாட் மூலம் தொடர்பு கொண்ட ஒரு பெண்ணிடம் அத்துமீறி பாலுணர்வைத் தூண்டும் வகையில் பேசி அசிங்கப்பட்டவர் இந்த சாரு நிவேதிதா என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அப்படிப்பட்டவர் ரஜினியை சாடியுள்ளது அவரது ரசிகர்களை கடும் கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கனடா நாட்டின் இயல் விருது பெற்றிருக்கிறார். இதற்கான பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் எழுத்தாளர்கள், திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார். மிகச் சிறப்பான உரையையும் அவர் கொடுத்திருந்தார்.

ஆனால் தற்போது ரஜினியை கடுமையாக சாடியுள்ளார் சாரு நிவேதிதா. அவர் எழுதிய ஒரு புத்தகத்தின் விமர்சனக் கூட்டத்தை சென்னையில் நடத்தினர்.இந்த விழாவில் நிவேதிதா பேசுகையில், ஒரு எழுத்தாளன் அதிக வாசகர்களைக் கொண்டு கூட்டம் நடத்தி விட்டார். அவரை மிஞ்சி நிற்க வேண்டும் என்ற நோக்கில், நூல் வெளியீட்டுக் கூட்டங்களையும், விமர்சனக் கூட்டங்களையும் நடத்தும் போக்கு, தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் நிலவுகிறது. அதற்காக, சினிமா நடிகர்களைக் கொண்டு பாராட்டுக் கூட்டங்களை நடத்திக் கொள்கின்றனர்.

தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள் என, சினிமா நடிகர் சொல்லும் அளவுக்கு, நிலைமையை மோசமாக்கி வருகின்றனர். இது ஆரோக்கியமான போக்கை, தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தவில்லை.

காமத்தை மையமாகக் கொண்டு நாவல்களை எழுதுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. இன்றைய இளைஞர்கள், காமத்தால் சீரழியும் போது அதை எழுதாமல் இருக்க முடியாது.

ஆங்கிலப் புனை கதைகளுக்கு இருக்கும், வரவேற்பு தமிழ் புனை கதைகளுக்கு இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று சமூகத்திற்குத் தேவையான பல கருத்துக்களைத் தெரிவித்தார் நிவேதிதா.

சாரு நிவேதிதா எப்போதுமே சர்ச்சையாகப் பேசக் கூடியவர், சர்ச்சையான எழுத்துக்களை எழுதுபவர். சமூகம் ஒரு பக்கம் சிந்தித்தால் இவர் கோணல் மாணலாக மட்டுமே சிந்திப்பவர். மேலும், தன்னுடைய எழுத்தால் ஈர்க்கப்பட்டு நட்பு பாராட்டிய ஒரு பெண்ணிடம், அநாகரீகமாக, அசிங்கமாக சாட்டில் வாசகங்களை வெளியிட்டு அம்பலப்பட்டு அசிங்கப்பட்டவர் இவர் என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

இப்படிப்பட்டவர் கோடானு கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள ரஜினியை சாடியிருப்பது ரஜினி ரசிகர்களை கடும் கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
Share this article :

0 உங்கள் கருத்துகள் இங்கே .........:

Join Us On Facebook

Please Wait 10 Seconds...!!!Skip

அதிகம் வாசிக்கப்பட்டவை

 
Support : Creating Website | vivasaayi | Mas Template
Proudly powered by vivasaayi
Copyright © 2011. விவசாயி-Tamil News - All Rights Reserved
Template Design by well come Published by vivasaayi