Latest News

November 23, 2011

லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு
by admin - 0

லிட்டருக்கு 97 கிமீ நானோ பைக்கை தஞ்சையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



தஞ்சாவூரிலுள்ள பொன்னையா ராமஜெயம் பல்கலைகழகத்தின் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பிரிவில் பயின்று வரும் இறுதியாண்டு மாணவர்கள் இந்த நானோ பைக்கை வடிவமைத்துள்ளனர். அந்த கல்லூரியின் மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர்கள் ஆலோசனையுடன் இந்த பைக்கை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த பைக்குகான உதிரிபாகங்களை நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரில் உள்ள ஹை-டெக் என்ற தனியார் நிறுவனம் ஒன்று வடிவமைத்துக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், ஹை-டெக் நிறுவனத்தின் வளாகத்தில் இந்த நானோ பைக்கை நேற்று சோதனை நடத்தி காண்பிக்கப்பட்டது.

பார்ப்பதற்கு சைக்கிள் போன்று இருக்கும் இந்த பைக்கில் ஒருவர் மட்டுமே செல்லலாம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இந்த நானோ பைக் 97 கிமீ செல்லும் என மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த பைக் அதிகபட்சம் மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஸ்டீல், அலுமினியம், அலாய் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நானோ பைக் வெறும் 25 கிலோ எடை மட்டுமே கொண்டது. இந்த பைக்கின் மெயின் ப்ரேம் ஸ்டீலில் உருவாக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க பிளாஸ்ட்டிக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சப்தத்தை குறைக்கும் வகையில் எஞ்சின் மற்றும் சக்கரங்களை இணைப்பதற்கு செயினுக்கு பதில் பெல்ட் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்குக்கு காப்புரிமை பெறுவதற்கான முயற்சிகளை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக அந்த கல்லூரியின் பேராசிரியர் தாஸ் நம்மிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த நானோ பைக்கை வர்த்தக ரீதியில் தயாரிப்பதற்கான சாத்திக்கூறுகள் இருப்பதாகவும், ஒரு பைக்கை தயாரிக்க ரூ.8,000 மட்டுமே செலவாகும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
« PREV
NEXT »

No comments