Latest News

May 23, 2011

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை
by admin - 0

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.


பின்லேடன் போன்று வேறு யாராவது பயங்கரவாதக் குழுவின் தலைவர் பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்தால், அங்கு மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு தயங்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக லண்டன் வந்த அவர், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியின்போது மேலும் கூறியது:

பாகிஸ்தானின் இறையாண்மை குறித்து கவனத்தில் கொண்டுள்ள போதிலும், அங்கு இருந்து கொண்டு அமெரிக்க மக்களை கொல்ல பயங்கரவாதிகள் திட்டம் தீட்டுவதை எவ்வாறு பார்த்துக்கொண்டு இருக்க முடியும், தலிபான் தலைவர் முல்லா ஓமர் போன்றவர்கள் அந்நாட்டில் இருப்பது தெரியவந்தால், அபோட்டாபாத் சம்பவத்தைப்போல் மீண்டும் தாக்குதல் நடத்த உத்தரவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. அமெரிக்காவை காக்க வேண்டியது எனது முக்கிய கடமை என்றார்.

பின்லேடன் கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தானில் தங்கியிருக்க உதவிய அதிகாரிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யாருடைய உதவியும் இல்லாமல் அவரால் இத்தனை ஆண்டுகள் அங்கு இருந்திருக்க முடியாது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு பாகிஸ்தானையும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் பெருமளவு உதவிபுரிந்துள்ளது என்றும் ஓபாமா அப்போது குறிப்பிட்டார்.




« PREV
NEXT »

No comments